இந்த பழைய 1 ரூபாய் உங்களிடம் இருக்கிறதா? லட்சாதிபதியாக நிச்சயம் ஆகிடுவீங்க
உங்களிடம் இந்த ஒரு ரூபாய் நாணம் இருந்தால், அதனைக் கொடுத்துவிட்டு நீங்கள் 5 லட்சத்திற்கு அதிபதியாக வாய்ப்புள்ளது.
லட்சாதிபதியாக்கும் பழைய ரூபாய்
பழைய பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதற்கான தேவைகள் அதிகமாகவே இருக்கின்றது. அதிலும் பழைய நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகள் என்றால் அதற்கு தனி மவுசு தான்.
நம்மிடம் இருக்கும் இந்த பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை போட்டி போட்டு வாங்குவதற்கு பல வலைத்தளங்கள் இருக்கின்றது. ஆனால் அந்த நாணயங்கள் அரிய வகையாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்டம் இருந்தால் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் நீங்கள் விற்பதன் மூலம் கோடீஸ்வரர் கூட ஆகலாம். நீங்கள் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் சேகரித்து வைப்பவராக இருந்தால் உங்களுக்கு அந்த வாய்ப்பு உள்ளது.
உங்களிடம் பழைய நாணயங்கள் இருந்தால், அவற்றை சர்வதேச சந்தைகளில் விற்று பெரும் தொகையை சம்பாதிக்கலாம். ஏனெனில் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளின் தேவை அதிகமாக உள்ளது.
பழங்கால மற்றும் பழைய நாணயங்களை எவ்வாறு விற்கலாம், எந்தமாதிரியான நாணயங்களை விற்கமுடியும் என்பதை பார்க்கலாம்.
அரிய ஒரு ரூபாய் நாணயம்
1995ம் ஆண்டு அச்சிடப்பட்ட இந்த ஒரு ரூபாய் நாணயத்தின் பின்புறம் இந்தியாவின் வரைபடம் மற்றும் வரைபடத்தில் ஒரு கொடி இருக்கும். இந்த நாணயம் உங்களிடம் இருந்தால் நிச்சயம் நீங்கள் 5 லட்சத்திற்கு அதிபதியாகலாம்.
இதே போன்று மற்றொரு ஒரு ரூபாய் நாணயம் ரூ.10 கோடிக்கு ஏலம் போகும் என்று கூறப்படுகுின்றது. அதாவது ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்ததாகவும், 1885ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட நாணயமாக இருந்தால் ரூ.10 கோடிக்கு விற்பனையாகும்.
எப்படி விற்பனை செய்வது?
உங்களிடம் இருக்கும் இந்த அரிய நாணயத்தினை விற்பனை செய்ய Quikr என்ற ஆன்லைன் விளம்பரத் தளத்தினை அனுகவும்.
இந்த தளத்தில் நீங்கள் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். இந்த நாணயத்தில் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்தால் உங்கள் விளம்பரம் காட்டப்படும்.
பின்பு உங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சள் ஐடியை உள்ளிட வேண்டும். நீங்கள் கொடுக்கும் தகவலை இணையதளம் சரிபார்க்கும்.
பின்பு இந்த நாணயத்தை விரும்பி வாங்க ஆர்வமுள்ளவர்கள் உங்களை நேராயடிக தொடர்பு கொண்டு விற்பனை செய்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |