உங்களிடம் பழைய ரூபாய் நோட்கள் இருக்கின்றதா? அப்போ நீங்க நிச்சயம் கோடீஸ்வரர் தான்
பழைய பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதற்கான தேவைகள் அதிகமாகவே இருக்கின்றது. அதிலும் பழைய நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகள் என்றால் அதற்கு தனி மவுசு தான்.
நம்மிடம் இருக்கும் இந்த பழைய நோட்கள் மற்றும் நாணயங்களை போட்டி போட்டு வாங்குவதற்கு பல வலைத்தளங்கள் இருக்கின்றது. ஆனால் அந்த நாணயங்கள் அரிய வகையாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்டம் இருந்தால் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் நீங்கள் விற்பதன் மூலம் கோடீஸ்வரர் கூட ஆகலாம். நீங்கள் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் சேகரித்து வைப்பவராக இருந்தால் உங்களுக்கு அந்த வாய்ப்பு உள்ளது.
இவற்றை விற்பனை செய்ய நீங்கள் எங்கும் அலையாமல், அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக விற்கலாம். இந்தியா மார்ட், காயின் பஜார், குயிக்கர், பின்ரெஸ்ட், ஓஎல்எக்ஸ் போன்ற வலைதளங்களில் இதனை விற்பனை செய்ய முடியும்.
5 ரூபாய் நோட்டுக்கு ரூ.30,000
சில தனித்தன்மைகள் வாய்ந்த பழைய 5 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், மிகவும் சுலமாக 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்.
இந்த நோட்டில் டிராக்டர் படம் இடம்பெற்றிருக்க வேண்டும். அதோடு 786 சீரியல் நம்பர் அதில் இருக்க வேண்டும். உங்களிடம் இந்த நோட்டு இருந்தால், அதை Coinbazzar வெப்சைட்டில் விற்பனை செய்யலாம்.
ஒரு ரூபாய் நோட்டுக்கு ரூ.45,000
1957ஆம் ஆண்டில் ஆர்பிஐ கவர்னராக இருந்த எச்.எம்.படேல் இந்த நோட்டில் கையெழுத்திட்டிருப்பதாடு, 123456 என்ற சீரியல் நம்பரும் இருக்க வேண்டும். இந்த நிபந்தனைக்குட்பட்ட ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் அதை Coinbazzar வெப்சைட்டில் விற்பனை செய்து 45,000 ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம்.
10 ரூபாய் நோட்டுக்கு ரூ.25,000
உங்களிடம் இருக்கும் 10 ரூபாய் நோட்ட, 1943ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கீழ் வெளியிடப்பட்டதாகவும், இந்த நோட்டுகளில் சி.டி.தேஷ்முக் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் நீங்கள் நிச்சயமாக ரூ.25 ஆயிரம் சம்பாதிக்க முடியும். இதுபோன்ற நோட்டுகளை நீங்கள் https://dir.indiamart.com/impact/old-coins.html மற்றும் https://in.pinterest.com/080841052o/sell-old-coins/ மற்றும் https://indiancurrencies.com/ என்ற இணையத்தில் விற்பனை செய்யலாம்.