உங்க காதலி ரொம்ப கோபப்பட்றாங்களா....அப்போ இதை பண்ணுங்க
பொதுவாகவே கோபம் என்பது அனைவருக்கும் வரும் ஒரு உணர்வாகும். குடும்ப உறவுகளுக்குள் ஒருவர் மீது ஒருவர் கோபப்படுவது இயல்பானதே. அந்த வகையில் அதிகமான சண்டையும் கோபமும் வருவது காதலர்களுக்கிடையில்தான்.
காதலர்களுக்கிடையில் கோபம் வருவது மிகவும் சகஜமானதுதான். ஆனால், அது உறவை பாதிக்காதவாறு இருக்க வேண்டும். இனி உங்கள் துணை கோபமாக இருந்தால் அதை எவ்வாறு சமாளிக்கலாம் எனப் பார்ப்போம்.
image - Mike & susan dawson
வார்த்தைகளில் கவனம் தேவை
உங்கள் துணை கோபமாக இருக்கும்போது அவரது கோபத்தை மேலும் அதிகரிக்காத வண்ணம் வார்த்தைப் பிரயோகம் இருக்க வேண்டும். அதாவது வார்த்தைகள் நடுநிலையாக இருக்க வேண்டும்.
இடத்திலிருந்து சென்று விடுங்கள்
துணை கோபத்திலிருக்கும் பொழுது நீங்கள் பேசும் வார்த்தைகள் அவர்களை மேலும் கோபப்படுத்தலாம். எனவே அவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்.
image - Distractify
பொறுமையை கடைபிடியுங்கள்
பயம்,சோகம்,வலி என்பவற்றினாலே பெரும்பாலும் கோபம் வருகின்றது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் எதனால் அதிகமாக கோபப்படுகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு பொறுமையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
கோபத்தை தவிர்க்க வேண்டும்
துணை கோபத்திலிருக்கும்போது பதிலுக்கு நீங்களும் கோபப்படாமல், உங்கள் துணையின் கோபத்தை அனுமதிக்க வேண்டும்.
image - Women's Health