ராட்சத பாம்பிற்கு வழிவிடாமல் சிறுமி செய்த சேட்டை: பொறுமையாக இருந்த பாம்பு என்ன செய்தது தெரியுமா?
இளம் கன்று பயமறியாது என்று சொல்வதை நிரூபிக்கும் குட்டிப் பெண்ணின் க்யூட் வீடியோ இது. ஆனால் பார்க்கவே பயப்பட வைக்கும் காணொளி இது
இன்டர்நெட் உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிறைந்துள்ளது. இங்கு தினமும் ஏதாவது ஒரு வீடியோ நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அண்மை நாட்களில் பாம்பு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பலராலும் விரும்பி பார்க்கப்படுகிறது.
இந்த வீடியோவில் ராட்சத மலைப்பாம்பைப் பார்த்து பயப்படாமல் இருக்கும் ஒரு குழந்தை ஆச்சரியத்தை மட்டுமல்ல, அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
இந்த அதிர்ச்சி வீடியோ, இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ள்து. இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சுமார் இருபது அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று, திறந்த வெளியில் அங்கும் இங்கும் ஊர்ந்து செல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது. அப்போது பாம்புக்கு முன்னால் ஒரு சிறுமி வருகிறார். அதன் பிறகு நடக்கும் விஷயங்களே இந்த வீடியோவை வைரலாக்கியது.
குழந்தையின் செய்கை ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கலாம், ஆனால் எனக்கு அப்படி பயம் எதுவும் இல்லை என்று சொல்வது போல் இருக்கிறது. பாம்பு செல்லும் பாதையைத் தடுக்கத் தொடங்குகிற சிறுமியைப் பார்த்து, சீறாமல் மலைப்பாம்பு தனது பாதையை மாற்றிக் கொள்கிறது.