ஆண் நபருடன் ஓவியாவின் நெருக்கமான காட்சி! ஏன் உயிரை வாங்குறீங்க? கோபமாக பேசியதால் அதிர்ச்சி
திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர்கரை நடிகை ஓவியா கோபமாக திட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஓவியா
நடிகை ஓவியா விமல் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டில் வெளிவந்த களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடந்து பல படங்களிலும் நடித்துள்ளார்.
ஆனால் இவர் நடித்த படம் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்பினைத் தேடித்தரவில்லை. படவாய்ப்பு இல்லாமல் இருந்த ஓவியாவிற்கு சில படங்களில் பாடல்களுக்கு நடனம் மட்டும் ஆடினார்.
பின்பு நீண்ட இடைவேளைக்கு பின்பு கடந்த 2017ம் ஆண்டு பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தனது உண்மையான குணத்தினை வெளிப்படுத்தி மக்களைக் கவர்ந்த ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை பெற்றதோடு, அடுத்தடுத்து படவாய்ப்புகளையும் பெற்றார்.
இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஆரவ்வை காதலித்து பிரச்சினை ஏற்பட்ட நிலையில், பிக்பாஸ் வீட்டில் தற்கொலை வரை சென்றார். ஆனால் இவருக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்தனர்.
திருமணம் எப்போது?
பின்பு காதல் தோல்வியில் மீண்ட ஓவியா, நடிப்பில் பிஸியானார். தற்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர், ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்திருந்தார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் உங்கள் காதலரா? திருமணம் எப்பொழுது? என்று கேள்வியை எழுப்பியதோடு, நீங்கள் காதலித்த ஆரவ் திருமணம் செய்து குழந்தையும் பெற்றுவிட்டார் என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஒவியா, எப்போது பார்த்தாலும் இதே கேள்விதான் கேட்பீர்களா! எனக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா சுத்தமா இல்லை. இந்த மாதிரி கேள்வியை கேட்டு உயிரை வாங்குறீங்க என்று கோபமாக பதில் அளித்துள்ளார்.
ஓவியாவின் இந்த பதில் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.