பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறதா? இந்த வீட்டு வைத்தியம் தீர்வு கொடுக்கும்
பொதுவாகவே பெண்களின் அந்தரங்க உறுப்பில் அரிப்பு உணர்வது எப்போதாவது நடக்க கூடிய இயல்பகான விடயம் தான்.
எரிச்சலூட்டும் ஆடைகள் முதல் தோல் தொற்றுகள் வரை இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நமைச்சல், அரிப்பு போன்றவை சில நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் அது குறித்து அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.
குறிப்பாக மாதவிடாய் மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சினை காரணமாகவும் பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. இதனை எளிமையாக சில வீட்டு வைத்தியங்கள் மூலம் எவ்வாறு சரிசெய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கற்றாழை
கற்றாழையில் கிருமி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணபப்படுகின்றது. இதில் காணப்படும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மாதவிடாய் காலங்களிலும் வெள்ளைப்படுதலின் போதும் ஏற்படும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். இதனால் பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை எளிமையாக தவிர்த்துக்கொள்ளலாம்.
ஆப்பிள் சைடர் வினிகர்
தொற்று ஏற்பட்டிருக்கும் இடத்தில் ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்துவது பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுக்ளை நீக்க பெரிதும் துணைப்புரியும்.
கிரீன் டீ
கிரீன் டீயில், உடலின் ஆற்றலை அதிகப்படுத்தும் வேதிப்பொருட்கள் அதிகமாக காணப்படுகின்றது. இது, சருமத்தில் ஏற்படும் கிருமி தொற்றுகளை அழிக்கும் தன்மை கொண்டது. இது பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுகளை நீக்குவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
பெப்பர்மிண்ட்
பெப்பர்மிண்ட் எண்ணெயில், சரும தொற்றுகளை அகற்றும் வேதிப்பொருட்கள் நிறைந்த காணப்படுகின்றது.இது பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுக்களை நீக்கி அதனால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலுக்கு விரைவில் நிவாரணம் கொடுக்கும்.
டீ ட்ரீ ஆயில்
டீ ட்ரீ ஆயிலில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்அதிகமாக காணப்படுகின்றது. தேன் மற்றும் வெந்நீரில் கலந்து அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவினால் விரைவில் நிவாரணம் கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |