நாவில் கரையும் ஆந்திரா ஸ்டைல் வெள்ளை பூசணிக்காய் மோர் குழம்பு ரெசிபி இதோ!
பொதுவாக நமது வீட்டில் பல உணவு வகைகளை செய்திருப்போம். அந்த உணவுகள் எல்லாம் வழமையாக செய்யும் உணவுகளாக இருக்கும்.
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு ரெசிபி வகைகள் இருக்கிறது. இதை எல்லாவற்றையும் நாம் ருசித்துப் பார்க்க ஆவலாக இருந்தாலும் சில உணவுகளை வித்தியாசமான முறையில் செய்திருப்பார்கள்.
இன்றைய பதிவில் நாம் பார்க்க போவது பூசணிக்காய் மோர்க்குழம்பு இந்த பூசணிக்காய் மோர்குழம்பை நீங்கள் செய்திருக்கலாம் ஆனால் இது ஆந்திரா ஸ்டைல் பூசணிக்காய் மோர்க்குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய் - 3 தேக்கரண்டி
- வெந்தயம் - 1 தேக்கரண்டி
- மிளகு - 1 தேக்கரண்டி
- தனியா - 1 தேக்கரண்டி
- சீரகம் - 3 தேக்கரண்டி
- பூசணிக்காய் - 200 கிராம்
- இஞ்சி - 2 துண்டு
- பச்ச மிளகாய் - 4
- துவரம் பருப்பு - 1 கப்
- கறிவேப்பிலை - கொஞ்சம்
- துருவிய தேங்காய் - 3 தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
- தயிர் - 1 கப்
- வெல்லம் - 1 துண்டு
- கடுகு - 1 தேக்கரண்டி
- காஞ்ச மிளகாய் - 2
- உப்பு - தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- தண்ணீர் - 1 கப்
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அது சூடாகியதும் வெந்தயம், மிளகு, தனியா, சீரகம், இதை நன்றாக வறுக்க வேண்டும்.
இவை வறுத்து வரும் சமயத்தில் இஞ்சி, பச்ச மிளகாய், ஊறவைத்த துவரம் பருப்பு போன்றவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். அடுத்தது இதில் கொஞ்சமாக கறிவேப்பிலை, துருவிய தேங்காய் சேர்க்க வேண்டும்.
இதை வறுத்ததும் பெருங்காயத்தூள், இதன் பின் தயிரை சோக்க வேண்டும். இதை எல்லாம் நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். இவற்றை தனியாக எடுத்து ஆற வைக்க வேண்டும்.
பின்னர் இதை ஒரு மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
இதன் பின்னர் அடுப்பில் இன்னும் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணை ஊற்றி கடுகு, காஞ்ச மிளகாய், மஞ்சள் தூள், உப்பு, வெள்ளை பூசணிக்காய் போட்டு நன்றாக தாழிக்க வேண்டும்.
இதனுடன் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக விட வேண்டும். இதன் பின்னர் அரைத்து வைத்த கலவையை சேர்க்க வேண்டும்.
இதனுடன் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்யலாம். பின்னர் நீங்கள் விரும்பினால் வெல்லம் சேர்க்கலாம்.
இதன் பின்னர் 5 நிமிடம் கொதிக்க விட்டு எடுத்தால் பூசணிக்காய் மோர்குரம்பு தயார். கடைசியாக கொத்தமல்லி இலையை சேர்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |