Chicken Briyani: திண்டுக்கல் ஸ்டைல் சிக்கன் பிரியாணி! அட்டகாசமான சுவையில் செய்வது எப்படி?
மணமணக்கும் திண்டுக்கள் ஸ்டைல் சிக்கன் பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக அசைவ பிரியர்களின் அதிகமான தெரிவு என்னவெனில் பிரியாணி தான். அதிலும் திண்டுக்கல் பிரியாணி என்றால் அலாதி பிரியமாகவே இருக்கின்றது.
தற்போது திண்டுக்கள் ஸ்டைலில் சிக்கன் பிரியாணியை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 200 மிலி
நெய் - 5 டேபிள் ஸ்பூன்
சீரக சம்பா அரிசி - 1 கிலோ
சிக்கன் - 1 கிலோ
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 150 மிலி
மல்லி - 1 கைப்பிடி
புதினா - 1 கைப்பிடி
உப்பு - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - 1
தண்ணீர் - 1 1/2 லிட்டர்
பொடி செய்வதற்கு..
பட்டை - 3 இன்ச்
கிராம்பு - 12
கல்பாசி - 5 கிராம்
ஏலக்காய் - 12
அன்னாசிப்பூ - 3
முந்திரி - 20
பிரியாணி இலை - 3
ஜாதிக்காய் பொடி - 1/4 டேபிள்
அரைப்பதற்கு...
சின்ன வெங்காயம் - 30
பச்சை மிளகாய் - 7
பூண்டு - 100 கிராம்
இஞ்சி - 100 கிராம்
செய்முறை
முதலில் மிக்ஸியில் பொடி செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளவும்.
பின்பு அதே மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
சிக்கனை நன்றாக கழுவி தனியாக வைத்துக்கொள்ளவும், அதே சமயம் சீரக சம்பா அரிசியை நீரில் 2 முறை கழுவி வைத்துக்கொள்ளவும்.
பின்பு பிரியாணி செய்வதற்கு அகலமான பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்துக்கொண்டு, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை 3 முதல் 5 நிமிடம் வரை வதக்கவும்.
பின்பு அரைத்து வைத்த பொடியையும் சேர்த்து 3 நிமிடம் வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து கொதிக்க விட்டு, மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு கழுவி வைத்துள்ள சிக்கன் பீஸை போட்டு மசாலா ஒன்று சேரும் வரை 3 நிமிடம் வேக வைத்து, அதில் தயிர், கொத்தமல்லி, புதினா, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
கழுவி ஊற வைத்துள்ள சீரக சம்பா அரிசியை சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நீரானது நன்கு சுண்டி அரிசி அளவிற்கு வந்ததும், மிதமான தீயில் வைத்து, பாத்திரத்தை ஒரு தட்டு கொண்டு காற்றுப்புகாதவாறு மூடி வைக்கவும்.
அதன் மேலே ஒரு வெயிட்டான பொருளை வைத்து 10 நிமிடம் தம் போட்டு இறக்கி, மேலே 3 டேபிள் ஸ்பூன் நெய், சிறிது புதினா மற்றும் கொத்தமல்லியைத் தூவி நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து 5 நிமிடம் கழித்து பரிமாறினால், சுவையான திண்டுக்கல் ஸ்டைல் சிக்கன் பிரியாணி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |