Bread Snack : மொறு மொறு சுவையில் அசத்தல் பிரட் ஸ்நாக்ஸ்... வெறும் 10 நிமிடம் போதும்
மாலை நேரத்தில் விளையாடிவிட்டு வரும் குழந்தைகளின் பசியை போக்கும் ஒரு அருமையான சிற்றுண்டி தான் பிரட் ஸ்நாக்ஸ். இது தேனீருடன் பக்காவாக பொருந்தும் உணவுகளின் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கின்றது.
வீட்டில் மீதியாக இருக்கும் பிரட்டை வைத்து வெறும் பத்தே நிமிடங்களில் ஒரு அருமையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் மிகவும் எளிமையாக எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பிரட்- 6 துண்டுகள்
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம்- 3 (தேலுரித்து நறுக்கியது)
சீரகம்- 1/2 தே.கரண்டி
உப்பு- தேவையான அளவு
புதினா- ஒரு கைப்பிடியளவு
கொத்தமல்லி இலை- ஒரு கைப்பிடியளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பிரட் துண்டுகளை சிறிது சிறிதாக வெட்டி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம்,சீரகம்,உப்பு, புதினா,கொத்தமல்லி இலை ஆகியவற்றையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் பாரத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்து வைத்துள்ள பேஸ்டை வடை அமைப்பில் தட்டி எண்ணெயில் போட்டு பொன்நிறமாக பொரித்து எடுத்தால் அசத்தல் சுவையில் மொறு மொறுப்பான பிரட் ஸ்நாக்ஸ் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |