இனி அரிசியில் புழு, வண்டு எதுவும் வராது...இதை ட்ரை பண்ணுங்க
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருள் என்றால் அது அரிசிதான்.
ஆனால், சில நேரங்களில் இந்த அரிசியில் புழுக்கள், பூச்சிகள், வண்டுகள் என்பன அரிசியை கெட்டு போகச் செய்துவிடும்.
சரி இனி இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட என்ன செய்யலாம் எனப் பார்ப்போம்...
image - elecrtolux.vn
குளிர்சாதனப் பெட்டி - ஏனைய உணவுப் பொருட்களை பாதுகாப்பதற்காக குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதைப் போல, அரிசியையும் வைக்கலாம்.
கிராம்பு - கிராம்பில் சிலவற்றை எடுத்து அரிசியோடு கலந்துவிட்டால் வண்டுகள் வராது. ஏனென்றால் கிராம்பு வாசனைமிக்க ஒரு மூலிகையாகும்.
சூரிய ஒளி - சூரிய ஒளி படும் நேரங்களில் அரிசியை அதில் காய வைத்து எடுக்கலாம். இவ்வாறு செய்யும்போது புழு, வண்டு எதுவும் வராது.
image - Zee news
பிரியாணி இலை - 4-5 பிரியாணி இலைகளை அரிசியில் போட்டு வைத்தால் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். இதன் வாசம் புழு, வண்டு என்பவற்றை அரிசியின் அருகில் வருவதை தடுக்கும்.
image - the chopra center
வெள்ளைப் பூண்டு - வெள்ளைப் பூண்டின் வாசத்திற்கும் புழு, பூச்சி, வண்டு என்பன வராது. எனவே இதையும் அரிசியுடன் கலந்து வைக்கலாம்.