கொலஸ்ட்ராலை கடகடன்னு குறைக்கனுமா? அப்போ இந்த மூலிகை இலைகள் இருந்தால் போதும்
கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு என்பது உடலில் இரத்தத்தில் இருக்கும் மெழுகு போன்ற பொருள். இது நல்ல கொழுப்பு HDL , மற்றும் கெட்ட கொழுப்பு LDL இரண்டு வகைகளில் உள்ளது.
கொலஸ்ட்ரால் என்பது மனித உடலுக்கு நல்லதை மட்டுமல்ல, கெட்டதையும் செய்யும். நாம் உட்கொள்ளும் உணவை ஜீரணிக்க தேவையான ஹார்மோன்கள், வைட்டமின் டி மற்றும் பிற பொருட்களை உருவாக்க கொலஸ்ட்ரால் துணைப்புரிகின்றது.
இருப்பினும் அதன் அளவு அதிகமானால் உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும். கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் ஆரோக்கியமான உணவு வகைகள் பலவும் காணப்படுகின்றது. வீட்டிலேயே இவகுவாக கிடைக்கக் கூடிய சில மூலிகை இலைகளை கொண்டு கொலஸ்ராலை எவ்வாறு கட்டுக்குள் வைக்கலாம் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
கொலஸ்ராலை கட்டுப்படுத்தும் மூலிகைகள்
கொழுப்பின் இரு வகைகளில் எந்த கொழுப்பாக இருந்தாலும் சரி, அதிக அளவில் இருந்தால் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
துளசி இலைகளில் xenoyl எனும் வேதிப்பொருள் உள்ளது, இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். தினசரி வெறும் வயிற்றில் துளசி இலைகளை மென்று சாப்பிடுவதன் மூலம் உடலில் காணப்படும் கெட்ட கொழுப்பை விரைவில் கரைக்க முடியும்.
கொத்தமல்லியை தொடர்ந்து உட்கொள்வது கொலஸ்ராலை கட்டுப்படுத்த மிகவும் துணைப்புரிகின்றது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்வும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது.
இவை தீங்கு விளைவிக்கும் நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக போராட உதவுகின்றன. கொத்தமல்லி பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்வாய்ப்படுவதைத் தடுக்கிறது.
முருங்கை இலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைவதைக் காணலாம். இது உங்கள் இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். முருங்கை இலை கசாயம் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் அருமருந்தாக காணப்படுகின்றது.
கறிவேப்பிலை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கறிவேப்பிலை கொழுப்பைக் குறைக்கும். இது ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கிறது, இது எல்டிஎல் கொழுப்பை கரைக்கிறது. எனவே வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவது பலன் தரும்.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த வேப்பிலை உதவுகின்றது. வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க வேண்டுமானால், வேப்ப இலைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |