நீங்க வாங்கும் தங்கம் சுத்தமான தங்கமா? வீட்லேயே எளிமையா கண்டுபிடிக்க சில வழிகள்
பொதுவாகவே தொன்று தொட்டு முதலீட்டுக்கான சிறந்த வழிகளில் தங்கம் முக்கிய இடத்தை பெற்று வருகின்றது. தண்ணீரை காதலிக்தாத மீன்களும் தங்கத்தை காதலிக்காத பெண்களும் பூமியில் கிடையாது' என்றால் மிகையாகாது.
அதிலும் குறிப்பாக இந்திய பெண்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் காதல் உலனம் அறிந்தது தான். குறிப்பாக தமிழ் பெண்களை பொருத்தவரையில் சேமிப்பு என்றாலே அது தங்கம் வாங்குவதுதான் என்ற நினைப்பு அவர்கள் மத்தியில் இருக்கும்.

பொதுவாகவே குடும்ப பெண்களின் வாழ்நாள் சேமிப்பு என்பது அவர்கள் வாங்கும் தங்கமாகத்ததான் இருக்கும்.
அப்படி மதிப்பு மிக்க சேமிப்பாக கருத்தும் தங்கத்தில் நாம் முதலீடு செய்யும் போது மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றது.

அந்தவகையில், தங்கத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் உண்மையில் சுத்தமான தங்கமா என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்வது என்பது குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்கலாம்.
எவ்வாறு கண்டறிவது?
தற்காலத்தில் தங்கம் என்றால் தங்க நகை, தங்க நாணயம், தங்கக் கட்டி போன்ற பாரம்பரிய சொத்துகள் மட்டுமல்லாமல், தங்கப் பத்திரம், டிஜிட்டல் தங்கம், தங்கம் நிதி, மின்னணு தங்க ரசீது என நவீன தங்க முதலீட்டு முறைகள் ஏராளமாக நடைமுறையில் காணப்படுகின்றது.

அப்படி என்னதான் நவீன தங்க முதலீடுகள் வந்தாலும் கூட தங்க நகை, தங்க நாணயம் போன்ற பாரம்பரிய சொத்துகள் மீதான ஆர்வம் இன்றளவும் குறையவே இல்லை என்று தான் சொல்ல வேண்டம்.
தங்கம் ஒரு ஆபரணமாக மட்டுமல்லாமல், தொடர்ந்து மதிப்பு உயரக்கூடிய பொருளாகவும், அவசர பணத் தேவைகளை பூர்த்தி செய்யவும், பணவீக்கத்தை சமாளிக்கக்கூடிய சொத்தாகவும் காணப்படுகின்றமையால் தங்கத்தை ஆபரணமாக வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது.

இப்படி அவசர தேவைக்கு தங்க நகையை பணமாக மாற்ற வேண்டும் என்றால், நாம் வாங்கும் தங்கம் சிறந்த தரத்தில் இருக்க வேண்டியது இன்றியமையாதது.
தங்கத்தில், செம்பு, துத்தநாகம், வெள்ளி போன்றவை கலக்கப்படுகிறது. இந்த கலப்படம் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியாக இருக்கும். ஆனால், வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நாம் வாங்கும் தங்கத்தின் தரத்தை பரிசோதித்து பார்க்கலாம்.

24 கேரட் என்பது 100% சுத்தமான தங்கம். 18 கேரட் மற்றும் 22 கேரட் என்பது நகைகளில் பயன்படுத்தப்படும் தங்கம். இதில் மற்ற உலோகங்களும் சேர்க்கப்பட்டிருக்கும்.
தங்கத்தின் தூய்மையை அறிந்துகொள்வதற்கு தனி இயந்திரங்கள் காணப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் பரவலாகவே நகைக் கடைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இயந்திரத்தில் தங்கத்தை வைத்தாலே அதன் தூய்மை பற்றி உடனே அறிந்துக்கொள்ள முடியும்.

தங்கம் சுத்தமானதா என கண்டறிய தங்க நகைகளின் மீது சில துளி வினிகரைத் தெளித்துப் பாருங்கள். அதன் நிறத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது போலியானது என்றும் மாற்றமே இல்லை என்றால் அது சுத்தமான தங்கம் என்றும் உறுதிப்படுத்தலாம்.
அல்லது, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் தங்க நகையைப் போட்டு, அந்த நகை உடனடியாக மூழ்கினால் அது தரமான தங்கம். ஆனால், சிறிது நேரம் மிதந்தால் அது போலியான தங்கம்.

தங்கம் எவ்வளவு இலகுவாக இருந்தாலும், எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும், தரமான தங்களம் எப்போதும் தண்ணீரில் உடனடியாக மூழ்கும் தன்மையைக் கொண்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
முக்கியமாக தங்கத்தில் கலப்படம் இருப்பதைத் தவிர்க்க எப்போதுமே ISI முத்திரை இருப்பதைப் பார்த்த பின்னரே தங்கத்தை கொள்வனவு செய்ய வேண்டும். இது தங்கத்தின் தரத்தை உறுதிப்படுத்தவும் சட்ட ரீதியான சிக்கல்களை தவிர்க்கவும் துணைப்புரியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |