Youtubeல் அடிக்கடி வீடியோ பார்ப்பீர்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்
உலகின் மிகப் பிரபலமான வீடியோ பகிர்வு தளங்களில் ஒன்றாக கூகுள் நிறுவனத்தின் youtube சேவையை குறிப்பிட முடியும்.
2005 ஆம் ஆண்டு பேபால் (PayPal) நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் பணியாளர்கள் மூவரினால் இந்த youtube சேவை ஆரம்பிக்கப்பட்டது.
வீடியோக்களை ஷேர் செய்வதற்கு இந்த இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ள முடிகின்றது.
உலகின் மிகப் பிரபலமான இணையதளங்களில் ஒன்றாக இந்த இணையதளம் கருதப்படுகின்றது.
வீடியோக்களை அப்லோட் செய்யவும் சப்ஸ்கிரைப் செய்யவும் கமெண்ட்கள் செய்யவும் பிளே லிஸ்ட்களை உருவாக்கிக் கொள்ளவும் இந்த youtube வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
மாதாந்தம் இரண்டு பில்லியன் பயனர்கள் youtubeபை பயன்படுத்தி வருகின்றனர்.
கூகுள் இணையதளத்திற்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் பயன்படுத்தக்கூடிய இணையதளமாக இந்த youtube இணையதளம் காணப்படுகின்றது.
இசை, விமர்சனம், திரைப்பட ட்ரெய்லர்கள், கல்வி சம்பந்தமான வீடியோக்கள் கேமிங் சம்பந்தமான வீடியோக்கள் ஆய்வுகள் என பல்தரப்பட்ட விடயங்களைக் கொண்ட வீடியோக்கள் youtube மூலம் பார்வையிட முடிகின்றது.
பப்ளிக் வீடியோக்களை எவர் வேண்டுமானாலும் பார்க்கவும் அவற்றை அக்சஸ் செய்யவும் முடிகிறது.
எனினும் வீடியோக்களை அப்லோட் செய்வதற்கு பயனர்கள் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க வேண்டியது அவசியமாகின்றது.
வீடியோக்கள் அதன் அளவு, ஃபார்மேட் எவ்வாறான உள்ளடக்கத்தை கொண்டுள்ளது போன்ற பலதரப்பட்ட விடயங்களின் அடிப்படையில் வகையீடு செய்யப்படுகின்றது.
youtube இணையதளத்தில் அல்லது மொபைல் அப்ளிகேஷன் ஒன்றின் மூலமாக காணொளிகளை பார்வையிட முடியும் அல்லது வேறு சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட விடயத்தின் ஊடாகவும் பார்வையிட முடியும்.
வேகத்தை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து படிமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- பிளே பேக்(Playback) வேகத்தை மாற்றி அமைக்க விரும்பும் வீடியோவை பிளே செய்யவும்
- செட்டிங்ஸ் ஐக்கனை அழுத்தவும் இது வீடியோ பிளேயர் இன் வலது பக்க கீழ் மூளையில் காணப்படுகிறது
- ஒரு மென்யூ தோன்றும் அந்த மென்யூவில் பிளே பேக் ஸ்பீட் என்ற ஆப்ஷனை அழுத்தவும்
- அப்பொழுது பிளே பேக் வேகங்கள அடங்கிய பட்டியல் ஒன்றை பார்வையிடுவீர்கள்
- உங்களுக்கு தேவையான வேகத்தை தேர்வு செய்யவும் இதே தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நீங்கள் தேர்வு செய்த வேகத்தில் youtube வீடியோ பிளே ஆகும். 0.25x (மிக வேகம் குறைந்தது) முதல் 2x (மிக வேகமானது) இதில் நீங்கள் விரும்பிய வேகத்தை தெரிவு செய்ய முடியும்
- நீங்கள் எந்த நேரத்திலும் பிளே பேக் வேகத்தை கூட்டி குறைக்க முடியும்
- இதே வழிமுறைகளை பின்பற்றுவதன் ஊடாக வேகத்தை கூட்டவும் முடியும் குறைக்கவும் முடியும்
- மேலும் ப்ளே பேக் வேகத்தை கூட்டிக் குறைப்பதற்கு சில ஷார்ட்கட் கீகளை பயன்படுத்த முடியும்
- பிளே பேக் வேகத்தை கூட்டுவதற்கு ஷிப்ட் ரைட் அரவை (>) ஒன்றாக அழுத்த வேண்டும்
- பிளே பேக் வேகத்தை குறைப்பதற்கு ஷிப்ட் உடன் இடது ஏரோ (<) பட்டனை அழுத்த வேண்டும்
- ரீசெட் பிளே பேக் வேகத்தை சாதாரண வேகத்திற்கு மாற்றுவதற்கு ஷிப்ட்டுடன் பூஜ்ஜியத்தை ஒன்றாக அழுத்த வேண்டும்
குறிப்பு :அனைத்து வீடியோக்களும் அனைத்து பிளே பேக் வேகத்துக்கும் ஒத்துழைப்பு வழங்காது
YouTube Premium:
youtube சப்ஸ்கிரைப் திட்டங்கள் கட்டணம் செலுத்தி சப்ஸ்கிரைப் செய்யும் சேவையை குறிக்கின்றது.
இலவசமான வீடியோக்கள் ஒரிஜினல் வீடியோக்கள் பிரத்தியேக திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை இதன் ஊடாக பார்வையிட முடியும்
YouTube Music Premium
யூட்யூப் மியூசிக் பிரீமியம் இந்த ஆப்ஷனின் ஊடாக இலவச மியூசிக் ஸ்ட்ரீமிங் செய்யவும் பேக்ரவுண்ட் பிளே செய்யவும் ஆஃப்லைன் பிளே பேக் செய்யவும் பிரத்தியேக வீடியோக்களையும் கண்டு களிக்கவும் முடிகின்றது.
YouTube TV
இந்த சேவையின் ஊடாக 85 தொலைக்காட்சி அலைவரிசைகளை பார்வையிட முடிகின்றது.