கோடைக்காலங்களில் இந்த தவறை தப்பி தவறி கூட செஞ்சுராதீங்க!
பொதுவாக கோடைக்காலங்களில் வெயிலின் தாக்கம் நேரடியாக இருப்பதால் சரும பிரச்சினை அதிகமாக இருக்கும்.
இது போன்ற காலங்களில் வெயிலில் எப்படி நமது உடலை பாதுகாத்து கொள்வது என சிலர் சந்தேகத்தில் இருப்பார்கள்.
மேலும், வெயில் காலங்களில் இது மட்டுமல்ல அதிகமான சூடு இருப்பதால் சருமம் கவனிக்காத பட்சத்தில் வறண்ட நிலைக்கு சென்று விடுகிறது.
இவ்வாறு சூடு அதிகத்து கொண்டே செல்லும் போது உடல் சூட்டை தாங்க முடியாமல் உடலினுள் சில நோய்களை உருவாக்கும்.
உதாரணமாக, வயிற்றுவலி, வெள்ளைப்படுதல், மாதவிடாய் தள்ளி போதல் போன்றவற்றை கூறலாம்.
அந்த வகையில் கோடைக்காலத்தில் எம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்பது தொடர்பில் தொடர்ந்து பார்க்கலாம்.
கோடைக்காலங்களில் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க
1. காலை, மாலை என இரண்டு வேளைகளும் குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வேண்டும்.
2. முகத்தில் அதிகப்படியான அழுக்குகள் படிந்து விடும். இதனால் அடிக்கடி முகத்தை கழுவி கொண்டே இருக்க வேண்டும்.
3. அதிகமாக வாசனை திரவியங்கள் பயன்படுத்தக்கூடாது. மேலும் சில்க் ஆடைகளை தவிர்த்து பருத்தி துணி ஆடைகளை பயன்படுத்துவது அவசியம்.
4. காலை 10 மணி முதல் மாலை 3 வரை அதிகமான சூடு இருக்கும். இதனால் வெளி பயணங்களை இது போன்ற நேரங்களில் தவிர்த்து கொள்ளவும்.
5. கீரை, இளநீர், நுங்கு, மோர் மற்றும் இதர பழச்சாறுகள் உள்ளிட்ட அதிகமான நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
6. காரசாரமான உணவுகளை தவிர்த்து கொள்வது சிறந்தது.