குளிக்கும் போது முகம் கழுவலாமா? இனிமேல் இதை செய்யாதீர்கள்
பொதுவாகவே நாம் குளிக்கும் போது முகங்களை கழுவது வழக்கம். அப்படியே குளிப்பதற்கும் முன் முகம் கழுவதும் நல்லது அல்ல. நீங்கள் குளிக்கும் போது எப்போது முகம் கழுவ வேண்டும் என்பது தெரியுமா?
குளித்து முடித்தப்பின்........
குளிக்கும் போதும் குளிப்பதற்கு முன்பும் முகம் கழுவ கூடாது. நீங்கள் குளித்து முடித்தப்பின் தான் முகத்தை கழுவ வேண்டும். ஏன் தெரியுமா?
1. நீங்கள் தலைக்கு குளிக்கும் போது தலைமுடிக்கும் ஷாம்பு பயன்படுத்துவீர்கள். அந்த ஷாம்பு தண்ணீர் உங்கள் முகத்தில் படுவதை உங்களால் தவிர்க்க முடியாது. முடி பராமரிப்புப் பொருட்கள் உங்கள் தலைமுடிக்கு நன்மைகளைச் செய்தாலும், அது உங்கள் சருமத்தை எதிர்மறையாக பாதிக்கலாம். தலையில் உள்ள எண்ணெய் உங்கள் சருமத்தில் பரவும்போது அது அடைபட்ட துளைகள் மற்றும் முகப்பருவை ஏற்படுத்தலாம்.
2. தலைக்கு ஷாம்பு பயன்படுத்தும் போது ஷாம்பூவில் உள்ள பல செயற்கை பொருட்கள் உங்கள் சருமத்தை எதிர்வினையாற்றத் ஆரம்பித்து விடும்.
3. வழக்கத்தை விட அதிக வினைத்திறன் கொண்ட தோல் ஒப்பனை பொருட்கள் மற்றும் சூரியக் கதிர்கள் அல்லது காற்றினால் கூட எளிதில் எரிச்சலடையலாம். அதிக உணர்திறன் வாய்ந்த தோல் விரைவில் சிவப்பு நிறமாக மாறும் மற்றும் இதனால் நீங்கள் அரிப்பு மற்றும் அசௌகரியத்தை உணரலாம்.
4. தலை முடிக்கு பயன்படுத்தும் ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்களில் உள்ள பல பொருட்கள் உங்கள் தலைமுடிக்கு ஏற்றதாக இருந்தாலும் குளிக்கும் போது முகத்தில் சேர்ந்து முகப்பருவை ஏற்படுத்தும். மேலும், உங்கள் சருமத்தில் தயாரிப்பு எச்சங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த உங்கள் வழக்கமான கடைசி படியாக உங்கள் ஃபேஸ் வாஷைப் பயன்படுத்துவது நல்லது.