தினம் ஒரு திருக்குறள்: ஒரு வார்த்தைக்கு இவ்வளவு ஆற்றல் இருக்கா? எச்சரிக்கும் வள்ளுவர்!
உலக பொதுமறை என்று அனைவராலும் போற்றப்படும் திருக்குறல் பற்றி அறியாதவர்கள் இருக்கவே முடியாது என்றால் மிகையாகாது.
அந்தளவுக்கு உலகளாவிய ரீதியில் பைபிலுக்கு அடுத்தப்படியாக அதிகமான மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட நூல் என்ற பெருமையும் திருக்குறல் பெற்றுள்ளது.

திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள், பதினென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக அறியப்படுகின்றது. வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நல்வழிகளையும் அந்த ஒரே நூலில் குறள் வழியாக நமக்கு திருவள்ளுவர் எடுத்துரைத்துள்ளார்.
திருக்குறளானது மொழி, இனம், மதம், சாதி, சமயம் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொருந்தக்கூடியதாக இருப்பதே இதன் சிறப்பு.

எல்லா காலங்களிலும் பொருந்தக்கூடிய வகையிலான வாழ்க்கை தத்துவங்களையும் திருக்குறளானது இரண்டு அடிகளில் கொண்டுள்ளது.
திருக்குறளை மூன்று பிரிவுகளாக திருவள்ளுவர் பிரித்து காட்டியுள்ளார்.அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று பிரித்திருக்கிறார்.
இத்தனை சிறப்பு வாய்ந்த திருக்குறள் நூலிலில் அடக்கமுடைமை என்ற அதிகாரத்தில் இருந்து ஒரு மனிதன் பேசும் வார்த்தைகளில் எந்தளவுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு திருக்குறலின் விளக்கம் பற்றி இந்த பதிவில் பார்கலாம்.

யாகாவா ராயினும் நாகாக்க
காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு...
ஒருவர் தன்னுடைய வாழ்வில் எதை காக்காத போதும் தன் நாவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டியன் அவசியம் குறித்தே திருவள்ளுவர் இந்த குறலின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
அதாவது நாம் பேசும் வார்த்தைகளால் ஒரு பிரச்சினையை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முடியும், அதே சமயம் வார்த்தைகளால் ஒரு நல்ல சூழலை களவர பூமியாக மாற்றவும் முடியும் என்கின்றார்.

அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த வார்த்தைகளை வெளிவிடும் நாவை ஒரு மனிதன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் தான் பேசிய வார்த்தைகளினாலேயே அவன் துன்பத்தை அனுபவிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக இந்த குறலின் மூலம் வள்ளுவர் எச்சரித்துள்ளார்.
எனவே வார்த்தைகளை பயன்படுத்தும் போது மிகுந்த நிதானத்துடன் பயன்படுத்த வேண்டும். வார்த்தைகளுக்கு நிலைமையை தலைகீழாக மாற்றக்கூடிய ஆற்றல் இருப்பதை உணர்ந்து வார்த்தைகளை பயன்படுத்துவோம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |