நின்றுகொண்டே சாப்பிடும் நபருக்கு ஆபத்து- நிபுணர்கள் கொடுத்த எச்சரிக்கை
தற்போது நிலவி வரும் பரபரப்பான காலகட்டத்தில் சாப்பிடக் கூட நேரம் இல்லாமல் பலரும் நின்றுக் கொண்டே சாப்பிடுகிறார்கள்.
இந்த பழக்கம் தவறு என நமது முன்னோர்கள் அடிக்கடி அறிவுறுத்திக் கொண்டே இருப்பார்கள்.
நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் முதல்படி உணவு தான். உணவை ஆரோக்கியமாகவும், ஒழுங்கான முறையிலும் அமர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் நின்றுக் கொண்டே சாப்பிடும் ஒருவருக்கு சில ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என நிபுணர் ஒருவர் பேசியது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில், நின்றுக் கொண்டே சாப்பிடும் ஒருவருக்கு என்னென்ன ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கிய குறைபாடுகள்
1. ஒருவர் நின்ற நிலையில் இருந்து சாப்பிடும் பொழுது புவி ஈர்ப்பு விசை காரணமாக கால்களில் தேங்கி இருக்கும் இரத்தம் செரிமான மண்டலத்தில் பாயும் அளவு குறைந்து விடுகிறது. இதனால் வாயு, வீக்கம், அஜீரணம் ஆகிய நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
2. நின்று கொண்டு சாப்பிடும் ஒருவர் அதிகளவான காற்றை உள்வாங்கி விடுவார். இதனால் அவர்கள் வாயு தொல்லை அசெளகரியத்தை அனுபவிப்பார்கள்.
3. அமர்ந்து கொண்டு சாப்பிடும் பொழுது உள்ள பொறுமை உணவை நின்ற நிலையில் இருந்து சாப்பிடும் பொழுது வராது. வேகமாக சாப்பிட வேண்டிய நிலை உருவாகி, செரிமான கோளாறுகள் இருக்கும்.
4. உணவை சரியாக மென்று சாப்பிடாத பொழுது வயிற்றுடன் தொடர்பான நோய்கள் அதிகரிக்கும். அத்துடன் வயிற்று உப்புசமும் ஏற்படும். கார்போஹைட்ரேட் உணவுகளை நின்றுக் கொண்டு சாப்பிடும் பொழுது வாயு, வீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |