மறந்தும் இனி செல்போனை இத்தனை முறை சார்ஜ் போடாதீங்க- ஆபத்து
பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத பொருட்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
சிலர் கையில் போன் இல்லாவிட்டால் உலகமே நின்றுவிட்டதைப் போல் உணர்வார்கள்.
செல்போனில் என்ன தான் புதிய அப்டேட்கள் வந்தாலும் அதனை பராமரிப்பதற்கு என்று சில நடைமுறைகள் உள்ளன.
அதனை மீறும் பட்சத்தில் போனில் பாவனைக்காலம் குறைவடைகின்றன. அதில் ஒன்று தான் போனை சார்ஜ் செய்வது.
அந்த வகையில் செல்போன் பாவனையாளர்கள் ஒரு நாளைக்கு எத்தனை தடவைகள் ஒரு போனை சார்ஜ் போட வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
செல்போனை எத்தனை தடவை சார்ஜ் போட வேண்டும்?
1. செல்போன் பயன்படுத்தும் போது அந்த போனின் பேட்டரி லெவல் 0% ஆகி, செல்போன் Switch off ஆகும் வரை பலர் பயன்படுத்துவார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான நடைமுறையாகும். இப்படி போனை பயன்படுத்துவதால் போனில் இருக்கும் பேட்டரி சீக்கிரமாக பழுதாகி விடும்.
2. ஒரு சிலர் செல்போன் 100% வரை சார்ஜ் போடுவார்கள். கொஞ்சம் குறைந்தாலும் உடனே உடனே சார்ஜ் செய்து விடுகிறார்கள். இப்படி போனை அடிக்கடி சார்ஜ் செய்தால், காலப்போக்கில் போனின் பேட்டரி கெட்டுவிடும்.
3. செல்போன் பாவனையாளர்கள் செல்போனின் பேட்டரி அளவு 20% க்கும் குறைவாக இருக்கும் போது பேட்டரியில் அதிக அழுத்தம் ஏற்படுத்துகிறது. இதனால் தான் போன் சார்ஜ் அளவு 20% க்கும் குறைவாக இருக்கும் பொழுது விரைவாக சார்ஜ் இறங்கி விடுகின்றது.
4. செல்போன் பேட்டரியை 100 % வரும் வரை பார்த்து கொண்டிருக்காமல் 80 முதல் 90 % வந்துவிட்டால் சார்ஜ் செய்வதை நிறுத்த வேண்டும். 100 % முழுமையாக சார்ஜ் செய்யும் பொழுது சில சமயங்களில் போன் வெடித்து விடலாம்.
5. தொழில்நுட்ப வல்லுநர்கள் செல்போனை சார்ஜ் செய்யும் போது 20-80 விதியைப் பின்பற்ற வேண்டும் என கூறுகிறார்கள். அதாவது, செல்போனை 20% இருக்கும் பொழுது சார்ஜ் செய்ய வேண்டும். அதே போன்று 80% சார்ஜ் ஆகி விட்டால் உடனே சார்ஜ் செய்வதை நிறுத்த வேண்டும். இது போன்ற டிப்ஸ்களை பின்பற்றினால் போனின் பேட்டரி பழுதடையாமல் நீண்ட நாட்களுக்கு இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |