Fish Kuzhambu: மீன் குழம்பை எத்தனை நாள் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்? இந்த தவறை மட்டும் செய்யக்கூடாது
மீன் குழம்பினை எத்தனை நாட்கள் வைத்து நாம் சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மீன் குழம்பு
அசைவ பிரியர்களுக்கு அதிகம் பிடித்த உணவு என்றால் அது கடல் உணவுகள் தான். அதிலும் மீன் உணவு என்றால் பலரும் அதற்கு அடிமை என்றே கூறலாம்.
ஆம் மீன் பொரித்து சாப்பிடுவது என்றால் அனைவருக்கும் அலாதி பிரியமாகும். அதே போன்று மீன் குழம்பு அதனை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் கூட வைத்து சாப்பிடுகின்றனர்.
மீன் குழம்பு கெட்டுப்போகாது என்பது மட்டுமின்றி, நாட்கள் செல்ல செல்ல அதன் சுவை இன்னும் அதிகமாகும் என்ற எண்ணம் தான்.
ஃப்ரிட்ஜில் மீன்குழம்பு
தற்போது மீன் குழம்பு மட்டுமின்றி அனைத்து உணவுகளையும் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடும் பழக்கம் இன்று அதிகமாகி வருகின்றது.
உண்மையிலேயே மீன் குழம்பு அறை வெப்பநிலையில் வைத்தால் சீக்கிரம் கெட்டுப்போய்விடுமாம். ஆதலால் சமைத்து முடித்து நன்கு ஆறிய பின்பு காற்று உட்செல்லாத பாத்திரத்தில் மீன் குழம்பை எடுத்து ப்ரிட்ஜில் வைக்கலாம்.
அதே போன்று சூடான உணவுகள் மற்றும் குழம்புகளை ஃப்ரிட்ஜில் வைப்பதை தவிர்க்கவும். ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட மீன் குழம்பினை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
இதை மறக்காமல் செய்திடுங்க
ஆனால் வெளியே எடுத்து வைக்கும் குழம்பு அறை வெப்பநிலைக்கு வந்த பின்பு கொதிக்க வைத்து சாப்பிடவும். பெரும்பாலும் ஒரே நாளில் மீன் குழம்பினை சாப்பிட்டு முடிப்பது நல்லது.
இரண்டாவது நாள் என்றால் அதனை சாப்பிடுவதற்கு முன்பு மீன் கெட்டுப்போகவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும். அதுவே மூன்றாவது நாள் என்றால் குழம்பில் புளித்த மணம் வருகின்றதா என்பதையும் மீன் துண்டுகளில் மாற்றம், குழம்பில் நிற மாற்றம் இருந்தால் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
ஃப்ரிட்ஜில் இருந்து எடுக்கும் குழம்பினை தேவைக்கு மட்டுமே எடுத்து சூடு செய்யவும். மொத்தமாக எடுத்து சூடுசெய்து சாப்பிட்ட பின்பு மீண்டும் சூடுபடுத்தி அதனை ஃப்ரிட்ஜில் வைப்பது தவறாகும்.
அதே போன்று குழம்பை எடுக்கும் போது ஈரம் இல்லாத, சுத்தமான கரண்டியை வைத்தே தேவையான குழம்பை எடுக்கவும். குறிப்பாக 0-4 செல்சியஸ் குளிர்நிலை இருப்பதை கட்டாயம் பார்த்துக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |