நாளொன்றுக்கு எத்தனை முறை காபி குடிக்கலாம்?
பொதுவாக காலை எழுந்தவுடன் பெரும்பாலானவர்கள் டீ அல்லது காபி குடிப்பார்கள்.
இப்படி காபி குடித்தால் தான் அவர்களுக்கு அன்றைய நாள் சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் இருப்பதாக நம்புகிறார்கள்.
இவ்வாறு நாம் தினமும் எடுத்து கொள்ளும் காபிக்கு இதய ஆரோக்கியத்தை அதிகரித்து மனச்சோர்வை குறைக்கும் ஆற்றல் உள்ளது.
உடலுக்கு தேவையான நன்மையை கொடுத்தாலும் அளவிற்கு அதிகமாக எடுத்து கொள்ளும் போது ஆரோக்கிய தீங்கை விளைவிக்கும்.
நீங்கள் காபி குடிப்பதற்காக பயன்படுத்தும் கப்பின் அளவில் தான் காபியின் எண்ணிக்கை இருக்கின்றது.
சாதாரணமாக நாளொன்றுக்கு 4 கப் காபி குடிக்கலாம். இதனால் பெரியளவு சேதம் இல்லை. குடிக்கும் கப்பின் அளவு அதிகரிக்கும் பொழுது ஆரோக்கிய பிரச்சினைகள் வர வாய்ப்பு இருக்கின்றது.
உதாரணமாக தலைச்சுற்றல், நீரிழப்பு, தலைவலி, வேகமான இதயத் துடிப்பு, அமைதியின்மை மற்றும் பதட்டம் மற்றும் மனநலப் பிரச்சினைகள் ஏற்படும் என ஆய்வுகளில் கூறுகின்றனர்.
அந்த வகையில் காபி குடிப்பது தொடர்பில் இன்னும் தெளிவாக தொடர்ந்து பார்க்கலாம்.
அடிக்கடி காபி குடித்தால் என்ன நடக்கும்?
1. சிலர் தூங்க செல்லும் முன்னர் காபி குடிப்பார்கள். இப்படி குடித்தால் சில சமயங்களில் அவர்களுக்கு சேராமல் போகும். இதனால் இரவு வேளையில் கவலை, குமட்டல் மற்றும் படபடப்பு உள்ளிட்டவைகளை ஏற்படுத்தும்.
2. வழக்கமாக ஒரு நாளைக்கு 400 மில்லிகிராம் வரை காஃபினைக் எடுத்து கொள்ளலாம். இதை தவறும் பட்சத்தில் தூக்கமின்மை, நடுக்கம் அல்லது அதிகரித்த இதயத் துடிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
3. காபி குடிப்பதால் கல்லீரல் சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோய் உள்ளிட்ட கல்லீரல் நோய்கள் வருவது குறைவாக இருக்கும். அத்துடன் காபியில் இருக்கும் அழற்சி எதிர்க்கும் பண்பு எம்மை அழற்சியிலிருந்து காக்கின்றது.
4. பலருக்கு, காபி என்பது வெறும் பானமாக இல்லாமல் சமூக தொடர்புகளை மேம்படுத்தும் சந்தர்ப்பமாக பார்க்கப்படுகின்றது. தமிழர்களின் நிகழ்வுகளில் காபி இல்லாமல் இருக்காது.
5. தினமும் குடிக்கும் காபியில் குளோரோஜெனிக் அமிலம் மற்றும் பாலிஃபீனால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து எம்மை காக்கின்றது. நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.
முக்கிய குறிப்பு
காபி குடிப்பது தவறதல்ல. குறிப்பிட்டதொரு அளவில் வைத்திருப்பது அவசியம்.