குழந்தை பெற்றுக்கொள்ள சரியான வயது எது? பலரும் செய்யும் தவறு இதுதான்
பொதுவாகவே திருமணத்துக்கு பின்னர் நீங்கள் குழந்தையைப் பெறத் திட்டமிடுகிறீர்கள் என்றால், இது சரியான நேரமா, அல்லது நீங்கள் காத்திருக்க வேண்டுமா அல்லது தாமதமாகிவிட்டதா என்று நீங்கள் குழப்பத்தில் இருக்கலாம்.
கர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் உண்மையில் நபருக்கு நபர் வேறுபடுகிறது. குழந்தையை வரவேற்க நீங்கள் உடல்ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மனரீதியாகவும், நிதிரீதியாகவும் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.
அந்த வகையில் பெற்றோராவதற்கு சரியான வயது எது? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சரியான வயது எது?
பொதுவாக இலங்கை , இந்தியா போன்ற நாடுகளில் ஆண்களுக்கு திருமணம் செய்துக்கொள்வதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆகவும், பெண்களுக்கு 18 ஆகவும் தற்போது 21ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது.
திருமணத்திற்கு சரியான வயது என்று அதை எடுத்துக்கொண்டாலும் பெற்றோர்களாவதற்கு எந்த வயது பொருத்தமானதாது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.
சிலர் திருமணம் ஆன பின்னர் சில ஆண்டுகளுக்கு குழந்தை வேண்டாம் என நினைப்பார்கள். இன்னும் சிலர் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அழுத்தத்தால் விரைவாக குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பார்கள்.
பெண்களை பொருத்தவரையில் தாயாவதில் வயது பெரிதும் தாக்கம் செலுத்துகின்றது. ஆனால் ஆண்களில் விந்தணு உற்பத்திக்கு குறிப்பிட்ட வரம்பு இல்லை என்பதால் ஆண்களுக்கு இது பெரிய பிரச்சினை இல்லை என்றே நினைக்கின்றனர்.
ஆனால் ஆண்களுக்கும் வயதாகும்போது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தரம் என்பன குறைகிறது.
மருத்துவர்களின் கருத்துப்படி, 18 முதல் 30 வயது வரை, ஒரு பெண்ணின் கருவுறும் தன்மை சிறப்பாக இருப்பதால், குழந்தைகளைப் பெறுவதற்கு சரியாக காலமாக பார்க்கப்படுகின்றது. பெண்களின் உடல் அமைப்பை பொருத்தவரை 30 வயதிற்குப் பிறகு கருவுறும் ஆற்றல் குறைவடைய ஆரம்பிக்கின்றது.
ஆண்கள் தந்தையாவதற்கு 25 முதல் 35 வயது வரையான காலம் ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றது.35 வயதிற்குப் பின்னர் ஆரோக்கியமான குழந்தையை பெறுவதற்கான வாய்ப்பு குறைய ஆரம்பிக்கின்றது.
ஆண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் உடற் தகுதி வாழ்நாள் முழுவதும் இருக்கும். காரணம் உடலில் விந்து உருவாகும் செயல்முறை ஒருபோதும் தடைப்படுவது கிடையாது.
ஆனால் ஆரோக்கியமாக குழந்தையை பெற்றுக்கொள்வதற்கான சரியான காலம் 25 முதல் 35 வயது என குறிப்பிடப்படுகின்றது.
அதனடிப்படையில் மனதளவிலும் உடலளவிலும் தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்ள 23 முதல் 32 வயது காலப்பகுதி சிறந்தது என மருத்துவர்களால் குறிப்பிடப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |