அஜினோமோட்டோ சாப்பிட்டால் ஒற்றைத் தலைவலி வருமா?
பொதுவாக இன்றைய அவசர உலகில் வீட்டில் சமைக்கும் உணவுகளை விட அதிகமாக கடைகளில் விற்பனை செய்யும் துரித உணவுகளை தான் வாங்கி சாப்பிடுகிறோம்.
இதன் பின் விளைவாக எடை அதிகரிப்பு, செரிமான கோளாறு, எடை இழப்பு, கல்லீரல் பிரச்சினை உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, பேக்கேஜ்கள் மற்றும் ஜங்க் ஃபுட்களில் “அஜினோமோட்டோ ” எனப்படும் சுவையூட்டி அதிகமாக சேர்க்கப்படுகின்றது.
அஜினோமோட்டோ ஒரு வகையான உப்பு. இதனை சாப்பாட்டில் தூவிய பின்னர் இனம்புரியாத சுவையொன்று வரும்.
இந்த சுவைக்கு அடிமையாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் உணவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள்.
அஜினோமோட்டோ என்பது அழைக்கப்படுவது ஒரு வகையான ரசாயனம். இதனை மோனோ சோடியம் குளுமேட் MSG என்றும் அழைப்பார்கள்.
மேலும் இந்த அஜினோமோட்டோவை கடந்த1909 ஆம் ஆண்டு ஜப்பானிய விஞ்ஞானி “கிகுனாவோ அகேடாவால்” கண்டுபிடித்தார்.
அஜினோமோட்டோவை நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் மற்றும் மஞ்சூரியன், சூப் உணவுகள் போன்ற சீன உணவுகளில் அதிகமாக பயன்படுத்துவார்கள்.
அதே சமயம் பீட்சா, பர்கர், மேகி மசாலா பொருட்கள், ஜங்க் ஃபுட், தக்காளி சாஸ், சோயா சாஸ், சிப்ஸ் உள்ளிட்ட உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றது.
அந்த வகையில் சுவைக்காக சேர்க்கப்படும் அஜினோமோட்டோவை தினமும் சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டால் குணப்படுத்த முடியாத நோய் வரும் என கூறப்படுகின்றது. இது தொடர்பான பூரண விளக்கத்தை தொடர்ந்து பார்க்கலாம்.
அஜினோமோட்டோவின் பக்கவிளைவுகள்
1. சீன உணவுகளில் பயன்படுத்தும் அஜினோமோட்டோ, நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றது. இதிலுள்ள குளுடாமிக் அமிலம் மூளையில் உள்ள நரம்பியக் கடத்தியாக செயல்படும். இது அளவிற்கு அதிகமாக இருந்தால் மூளை பாதிக்கப்படும்.
2. நொறுக்கு தீனிகளை அதிகம் சுவைக்கும் பழக்கம் தற்போது அதிகரித்து விட்டது. இதில் அதிகமாக அஜினோமோட்டோ சேர்ப்பதால் பசி அதிகரிக்கின்றது. இதனால் அதிகமாக சாப்பிட்டு உடல் எடை கணிசமாக உயரும்.
3. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருபோதும் சீன உணவுகளை சாப்பிடக்கூடாது. ஏனெனின் அஜினோமோட்டோவில் இருக்கும் சோடியம் கர்ப்பக்காலத்தில் தாய்மார்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கின்றது.
4. அஜினோமோட்டோ கலந்த உணவுகளை எடுத்து கொண்டால் இரத்த அழுத்த பிரச்சனை அதிகரிக்கும்.
5. இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் அஜினோமோட்டோ கலந்த உணவுகளை சாப்பிட்டால் தூக்கமின்மை, ஒற்றை தலைவலி ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. அத்துடன் நாள் முழுவதும் ஒரு வகையான சோர்வை உருவாக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |