ஒருவருக்கு ஒரு கிட்னி மட்டும் இருந்தால் எவ்வளவு நாட்கள் உயிர் வாழலாம்?
மனித உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் முக்கியமான பணியை செய்கிறது சிறுநீரகம். கழிவுகளை சரிவர வெளியேறினால் மட்டும் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
இது மட்டுமன்றி திரவங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை என்பவற்றை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆனால் தற்போதைய உணவுப்பழக்க வழக்கம், உடற்பயிற்சி இல்லாதது போன்ற பல காரணிகளால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதிப்படைகிறது.
இதனால் சிலர் தங்கள் ஒரு சிறுநீரகத்தை அகற்ற வேண்டிய நிலையும் ஏற்படும். ஆனால் ஒரு சிறுநீரகத்துடன் ஒருவர் எவ்வளவு நாள் உயிர் வாழ முடியும் என்பது தற்போதும் சந்தேகமாக தான் உள்ளது. அதை பற்றி விரிவாக பதிவில் பார்க்கலாம்.
எவ்வளவு காலம் உயிர் வாழ முடியும்?
ஒருவருக்கு ஒரு சிறுநீரகம் தான் உள்ளதென்றால் அந்த சிறுநீரகம் மிகவும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே அந்த நபரால் உயிர் வாழ முடியும். ஒரு சிறுநீரகத்துடன் மனிதன் சாதாரண ஆயுள்காலம் வரை வாழ முடியும்.
காரணம் மீதமுள்ள சிறுநீரகம் அதிகமாக வடிகட்டி இரண்டு சிறுநீரகங்களின் வேலைகளையும் செய்கிறது. ஆனால் இந்த நேரத்தில் உயர் ரத்த அழுத்த பிரச்சனை வரும்.
இது சிறுநீரகங்களுக்கு ஆபத்தை கொடுக்கும். எனவே இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம். ஒரு சிறுநீரகம் எல்லா வேலைகளையும் செய்கிறது என்பதால் அதிகமான உப்பு உட்கொள்ள கூடாது என மருத்துவரால் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், புரதம் மற்றும் பொட்டாசியத்தின் அளவைக் கட்டுப்படுத்தும் உணவைப் பின்பற்றுவது முக்கியம். சிறுநீரகங்கள் சரியாக செயல்பட, உடலில் நீர் பற்றாக்குறை இருக்கக்கூடாது.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். விளையாட்டுக்கள் பாரம் தூக்குதல் போன்ற சிறுநீரகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் செயற்பாடுகளை தவிர்ப்பது அவசியம்.
இதிலும் முக்கியமாக சிறுநீரகங்கள் சரியாக செயல்படுகின்றனவா என்பதைச் சரிபார்க்க இரத்தப் பரிசோதனைகள் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் அவசியம். இதை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை செய்வது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |