டீயை சூடுபண்ணி குடிக்கிறீங்களா? இந்த ஆபத்துகள் வரும்
தற்போது பல கோடிக்கணக்கான மக்கள் தேனீரை விரும்பி குடிக்கின்றனர். காலையில் எழுந்தவுடன் டீயைகுடிப்பதை வழக்கமாகவே சிலர் வைத்துள்ளனர்.
ஆனால் தற்போது இருக்கும் பல மக்களுக்கு தேனீரை சூபடுத்தி குடிக்கும் பழக்கம் தற்போது அதிகமாகி இருக்கின்றது.
Journal of Food Science-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், தேநீரை மீண்டும் சூடுபடுத்தி குடிக்க கூடாது.
மீறினால் அதில் இருக்கும் கேட்டசின்கள் போன்ற நன்மை பயக்கும் சேர்மங்களை சிதைத்து, சுவை மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கும் பயோஜெனிக் அமின்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மனித உடலில் பல பிரச்சனைகள் வரலாம் அது குறித்து இங்கே பார்க்கலாம்.
டீயை சூடுபடுத்தி குடித்தால் என்ன நன்மைகள் கிடைக்கும்
ஆக்சிஜனேற்றிகள் இழப்பு | தேநீரில் கேட்டசின்கள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் இருக்கின்றது. அவை வீக்கத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன. ஆனால் தேனீரை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி குடித்தால் இந்த ஆக்ஸிஜனேற்றிகள் அழிந்து திங்கு விளைவிக்ககூடிய பொருட்கள் உண்டாகும். |
டானின் அதிகரிப்பு மற்றும் கசப்புத்தன்மை | தேநீரை மீண்டும் சூடாக்குவது டானின் அளவை அதிகரிக்கிறது. இதனால் தேநீர் மேலும் கசப்பாகவும் அமிலத் தன்மை நிறைந்ததாகவும் மாறும். டானின்கள் இரும்புச்சத்து போன்ற சத்துக்களை உறிஞ்சும் உடலின் திறனைப் பாதிக்கும். அதிலும் சூடாககிய தேனீரை குடிப்பது குடல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை கொண்டு வரும். |
பாக்டீரியாக்களின் வளர்ச்சி | அறிய தேனீரில் கிருமிகள் வளரும் எனப்படுகின்றது. இந்த கிருமிகள் தேநீரை மீண்டும் சூடுபடுத்தும் போது அழிந்து போகாது. குறிப்பாக பால் சேர்க்கப்பட்டிருந்தால் அது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். பால் சேர்க்கப்பட்ட டீ அறை வெப்பநிலையில் நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் பாக்டீரியா மாசுபாட்டிற்கு எளிதில் ஆளாகிறது. இந்த சூழ்நிலையில் மீண்டும் சூடேற்றப்பட்ட தேநீரைக் குடிப்பது வயிற்று வலி அல்லது உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். |
செரிமான ஆரோக்கியத்தைப் பாதிக்கும் | தேநீரை மீண்டும் சூடுபடுத்துவது அதன் அமிலத்தன்மையை அதிகரிக்கும். இதனால் நெஞ்செரிச்சல், இரைப்பை அழற்சி அல்லது அமில ரிஃப்ளக்ஸ் போன்ற நிலைமைகளை மோசமாக்கும். அமில பானங்களுக்கு உணர்திறன் உள்ளவர்கள் மீண்டும் சூடாக்கப்பட்ட தேநீரை தொடர்ந்து குடித்தால் வீக்கம் அல்லது வயிற்று எரிச்சலை அனுபவிக்கலாம். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |