தொங்கும் தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிடுங்க...
பொதுவாகவே ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் தற்காலத்தில் அதிகரித்த வேலைபளு, துரித உணவுகளின் அதிகமாக நுகர்வு, போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிப்பதுடன் பெரும்பாலானவர்கள் தொப்பை பிரச்சினையால் அவதிப்டுகின்றாகள்.
ஹார்மோன் சமநிலையின்மை, உடல் செயல்பாடு இல்லாமை, மன அழுத்தம் மற்றும் பல காரணிகள் இதில் அடங்கும்.
இவ்வாறு உடல் எடையால் பாதிப்பை எதிர்நோக்குபவர்கள் உடற்பயிற்சியுன், இலவங்கப்பட்டையை எவ்வாறு பயன்படுத்தினால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
எப்படி பயன்படுத்துவது?
இலவங்கப்பட்டை உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. வளர்சிதை மாற்றம் வேகமாக இருக்கும்போது, உடலானது நாம் உண்ணும் உணவில் உள்ள கலோரிகளை வேகமாக எரிக்கின்றது அதனால் விரைவில் உடல் எடையை குறைக்க முடியும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் இலவங்கப்பட்டை பொடியை கலந்து குடித்து வந்தால், வெகு விரைவில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
இரத்த சர்க்கரை அதிகரிப்பானது உடல் எடை அதிகரிப்புக்கு ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், இலவங்கப்பட்டை உடலில் இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றது.
தினமும் காலையில் இலவங்கப்படை தண்ணீர் பருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் கொண்டுவரப்படுவதுடன் உடல் எடையும் வெகுவாக குறையும். அது மட்டுமன்றி உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதையும் இது தடுக்கின்றது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் தேனை அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கொழுப்பை வெகு விரைவில் கரைக்கப்படும்.
வெதுவெதுப்பான நீரில் இலவங்கப்பட்டை சேர்த்து இரவில் தூங்குவதற்கு முன்னர் குடுத்து வந்தாலும் சுமார் 30 நாட்களில் உடல் எடை குறை ஆரம்பிக்கும்.
குறிப்பாக செரிமானம் நன்றாக இருந்தால், உணவு சரியாக ஜீரணமாகும், உடலில் கொழுப்பு சேராமல் இருக்க செரிமான அமைப்பு சீராக இயங்க வேண்டியது அவசியம்.இலவங்கப்பட்டை வயிற்றுப் பிரச்சினைகளைப் போக்குவதோடு, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் துணைப்புரிகின்றது.
இலவங்கப்பட்டையை கிரீன் டீயில் கலந்து குடித்து வந்தால் எதிர்பார்த்ததை விடவும் சிறந்த பலனை பெறலாம். இது தொப்பை பிரச்சினைக்கு சிறந்த தெரிவாக இருக்கும்.
இத்துடன் முறையான உடற்பயிற்ச்சி மற்றும் புரதம், நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவு முறையை பின்பற்ற வேண்டியதும் இன்றியமையாதது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |