தலை சீவும் போது கையோட கொத்து கொத்தா முடி வருதா? அப்போ ஷாம்போவுக்கு முன் இதை யூஸ் பண்ணுங்க!
பொதுவான ஆண், பெண் இருபாலாருக்கும் பல்வேறு தலைமுடி பிரச்சனைகள் உள்ளன.
தலைமுடி பிரச்சினையால் ஏற்படும் பாதிப்புகள் ஹார்மோன் அல்லது பரம்பரையாக இருக்கும் பிரச்சனையாக இருந்தாலும், இயற்கை வைத்தியம் முடி உதிர்தலை எதிர்த்துப் போராட உதவும்.
அந்த வகையில், முட்டை போன்ற கால்சியச்சத்து நிறைந்த உணவுகள் தலைமுடி உதிர்வு பிரச்சினையை கட்டுபடுத்துகின்றது.
மேலும் பளபளப்பாக கூந்தல் வேண்டும் என நினைப்பவர்கள் முட்டையால் செய்யப்படும் ரெமடிகளை பின்பற்றலாம்.
இதன்படி, முட்டையால் தலைமுடிக்கு செய்யப்படும் ரெமடிகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
1. முட்டை ஹேர் மாஸ்க்
ஹேர் மாஸ்க் செய்ய தேவையான பொருட்கள்
- முட்டைகள் - 2
- ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி
- தேன் - 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும் பின்னர் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் ஆகிய இரண்டையும் நன்றாக கலந்து விட்டு கொள்ளவும்.
குளிப்பதற்கு முன்னர் இந்த ஹேர் பேக்கை தலைக்கு அப்ளை செய்ய வேண்டும் சரியாக 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ போட்டு முடியை அலச வேண்டும்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
2. முட்டை நீரில் முடியை அலசுதல்
தேவையான பொருட்கள்
- முட்டை - 1
- தண்ணீர் - 1 கப்
செய்முறை
ஒரு பவுலில் முட்டையை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும். அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கலந்து கொள்ளவும்.
தேவையென்றால் அதில் எலுமிச்சை சாறு சில துளிகள் விட்டு கலக்கலாம். கலந்த தண்ணீரை கூந்தலில் ஊற்றி அலச வேண்டும்.
இவ்வாறு செய்தால் தலைமுடி வெடிப்பு இருந்தால் தடம் தெரியாமல் மறைந்து விடும். குளித்து முடித்த பின்னர் இறுதியாக தான் இந்த நீரை பயன்படுத்த வேண்டும்.
முக்கிய குறிப்பு
தொடர்ந்து பின்பற்றுவது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |