இந்த பழக்கம் ஆபத்தானது! வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடாதீங்க... எச்சரிக்கும் வள்ளுவர்
எல்லா காலங்களிலும் பொருந்தக்கூடிய வகையிலான வாழ்க்கை தத்துவங்களையும் ஒருசேர போதிக்கும்,உலக பொதுமறையான திருக்குறல் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது என்றால் மிகையாகாது.
அந்தளவுக்கு உலகளாவிய ரீதியில் பைபிலுக்கு அடுத்தப்படியாக அதிகமான மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட நூல் என்ற பெருமையும் திருக்குறளுக்கு உண்டு.

திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள், பதினென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக அறியப்படுகின்றது.
வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நல்வழிகளையும் அந்த ஒரே நூலில் குறள் வழியாக நமக்கு திருவள்ளுவர் எடுத்துரைத்துள்ளார். திருக்குறளானது மொழி, இனம், மதம், சாதி, சமயம் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொருந்தக்கூடியதாக இருப்பதே திருக்குறளின் சிறப்பு.

திருக்குறளை மூன்று பிரிவுகளாக திருவள்ளுவர் பிரித்து காட்டியுள்ளார்.அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று பிரித்திருக்கிறார்.
இத்தனை சிறப்பு வாய்ந்த திருக்குறள் நூலிலில் வினைத்திட்பம் என்ற அதிகாரத்தில் நாம் மற்றவர்களை வெளித்தோற்றத்தை பார்த்து எடை போடுவது எந்தளவுக்கு தவறானது என்பது குறித்து உணர்த்தும் ஒரு சிறப்பான திருக்குறளின் விளக்கம் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்
உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.
பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் தேருக்கு அச்சாணி என்பது சிறிதாகத்தான் இருக்கும். அதாவது தேரை நகர்த்த பயன்படும் சில்லுகளின் நடுவில் இருக்கும் கருவி தான் அச்சாணி. இது மற்றவர்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்காது. இருப்பினும் இந்த அச்சாணி தான் தேர் தெருவில் சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.

சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை வெளித்தோற்றத்தை பார்த்து மதிப்பிடுவது பெரிய முட்டாள்த்தனம் என திருவள்ளுவர் எச்சரிக்கின்றார்.
உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் ஆனால் அது இல்லாவிட்டால் தேர் இல்லை என்பது தான் உண்மை.

அப்படி நம்மில் பலரும் திரைக்கு அப்பால் அந்த நிகழ்வையே தாங்கி பிடித்துக்கொண்டு இருப்பார்கள் ஆனால் பார்வைக்கு அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்பது போல் தோன்றலாம்.
வெளியில் தெரிவதை மட்டும் பார்த்து ஒரு முடிவுக்கு வருவது பெரும்பாலான நேரங்களில் நம் சரிவுக்கு காரணமாகிவிடும் எனவே ஒருவரின் திறமையின் ஆழத்தை புரிந்து அவரை மதிப்பிட வேண்டும் என்பதை இந்த குறள் சிறப்பாக உணர்த்துகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |