வாய்வு பிரச்சினை வர என்ன காரணம்- பலரும் அறியாத மருத்துவ தகவல்
பொதுவாக தற்போது இருக்கும் மோசமான உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக புதிய நோய்களின் அபாயம் அதிகரித்து வருகிறது.
வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, வயிற்றில் அழுத்தம், வீக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் அது சில வேளைகளில் இரைப்பை குடல் நோய் அறிகுறியாக இருக்கலாம்.
வயிற்றில் உள்ள அமிலச் சுரப்பு அதிகரிக்கும் போது குடலில் உள்ள வாய்வுவின் அழுத்தம் அதிகரிக்கும். இதன் காரணமாகவே வாய்வு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
அந்த வகையில் வாய்வு பிரச்சினைகள் ஏன் ஏற்படுகிறது? அதில் ஏன் ஒரு மாதிரியான சத்தம் வருகிறது? என்பதனை பதிவில் பார்க்கலாம்.
வாய்பு பிரச்சினை வர காரணம்
உணவு சாப்பிடும் பொழுது நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அவசரமாக சாப்பிடும் பொழுது, தண்ணீரை அண்ணாந்து குடிப்பது, டீ, காபி, பாட்டில் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும் போது ஆகிய சந்தர்ப்பங்களில் காற்று உள்ளே செல்கிறது.
இது குடலில் உணவு செரிமானத்தின் பொழுது இயல்பாகவே உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நொதித்தல் செயன்முறை மூலம் வேதி மாற்றங்களை நிகழ்த்தம். இதன் செயன்முறையின் பொழுது ஹைட்ரஜன், நைட்ரஜன், மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன் உள்ளிட்ட வாய்வுகள் தோன்றும்.
இது போன்று தினமும் சுமார் 2 லிட்டர் வரை வாயுக்கள் உற்பத்தி, ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப்பாதை வழியே வெளியேற்றப்படுகிறது. ஆரோக்கியமான மனிதர் ஒருவரின் குடலில் 200 மி.லி. அளவில் தான் வாயு இருக்கும். இவை ஏப்பம் மூலமாக வாய் வழியாக அல்லது ஆசனவாய் வழியாக வெளியேறி விடும்.
வழக்கமாக உருவாகும் ஹைட்ரஜன், நைட்ரஜன், மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன் உள்ளிட்ட வாய்வுகளில் துர்நாற்றம் இருக்காது. மாறாக குடலில் “பெப்சின்” போன்ற என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும் போது புரத உணவு சரியாக செரிமானத்திற்குள்ளாகாது.
அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்பைடு, மெர்காப்டன் போன்ற வாயுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறும். அப்போது தான் துர்நாற்றம் வீசும்.
சத்தம் வருவது ஏன்?
வயிற்றிலுள்ள ஹைட்ரஜனும், மீத்தேனும் சரியான அளவில் ஆக்சிஜனுடன் கலந்தால் சத்தம் இல்லாமல் வாய்வு வெளியேறும். ஆனால் மேற்குறிப்பிட்ட கலவைகள் அதிகமாக இருந்தால் சத்தம் வரும். நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 முறை வாயு வெளியேறும்.
தீர்வுகள்
1. மொச்சை, பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாலில் செய்த இனிப்புகள், வெங்காயம், காலிபிளவர், முட்டைக்கோஸ் உள்ள உணவுகளை வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் ஒரு அளவுடன் சாப்பிடுவது அவசியம்.
2. தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது கட்டாயம். அப்படி தண்ணீர் குடிக்கும் பொழுது அதனுடன் சீரகம் கலந்து குடிக்க வேண்டும். காலை, மாலை என இரு வேளைகளும் தண்ணீருடன் சீரகம் கலந்து குடித்தால் உள்ளே இருக்கும் உறுப்புகளும் சுத்தமாகும். வாய்வு பிரச்சினையும் குறையும்.
3. சீரகம், ஓமம், பெருங்காயம், மிளகு, சுக்கு, கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல், சுண்டை வற்றல் உள்ளிட்ட பொருட்களை வறுத்து பொடித்து வைத்து கொள்ள வேண்டும். சாப்பிடும் பொழுது சாதத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
4. மோரில் வறுத்த பெருங்காயத்தூள், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து குடிக்கலாம். இதுவும் வாய்வு பிரச்சினைக்கு தீர்வாக பார்க்கப்படுகிறது.
5. வயிற்றுப் பொருமலுக்கு ஓமத் தண்ணீர் ஒரு அருமருந்து, பெரியவர்கள் 5-10 மி.லி. சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம். இதனால் வாய்வு பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
