நீருக்கு அடியில் சென்று எவ்வாறு பாலம் கட்டுறாங்கன்னு தெரியுமா? பலரும் அறியாத தகவல்
பொதுவாகவே தற்காலத்தில் பெரும்பாலான நாடுகளில் சனத்தொகை அதிகரிப்பு காரணமாகவும் வர்த்தக துறையை விரிவுப்படுத்தும் நோக்கிலும் பல நாடுகளில் நீர்பரப்புகளையும் பயன்படுத்தும் நடைமுறையானது மிகவும் சாதாரணமாகிவிட்டது.
குறிப்பாக கடலுக்கு அடியில் பாலங்கள் கட்டுவது ஒரு பொதுவான நடைமுறையாகிவிட்டது, ஆனாலும் பெரும்பாலானவர்களுக்கு ஆழமான நதி நீரில் அல்லது கடலுக்கு அடியில் எவ்வாறு பாலம் அமைக்கப்படுகின்றது என்ற சந்தேகம் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது.

உண்மையில், வேகமாக ஓடும் ஆறுகளிலும் ஆழமான நீரிலும் அஸ்திவாரங்களை அமைப்பது மிகவும் சிக்கலான மற்றும் ஆபத்தான பணியாகும். இந்த பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு உயிராபத்து மிக அதிகம் என்பது அகைவரும் அறிந்ததே.
அப்படியிருக்கையில், நீருக்கடியில் எப்படி அடித்தளம் அமைப்பது? பாலத்தின் உறுதித்தன்மையை எவ்வாறு உறுதி செய்வது? என்பது குறித்த பலரின் சந்தேகங்களுக்கான விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

நீர்நிலைகளுக்கு மேல் பாலங்கள் கட்டுவதில் உள்ள சவால்கள் தண்ணீருக்கு மேல் பாலங்கள் கட்டுவதில் உள்ள முக்கிய தடைகளில் ஒன்று உறுதியான அடித்தளத்தை அமைப்பதாகும்.
வேகமாக நகரும் நீரைக் கையாளும் போது கட்டமைப்பை அடைந்து நிலைப்படுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதில் இருந்தே சவால்கள் ஆரம்பிக்கின்றன்.

எப்படி அடித்தளம் அமைக்கப்படுகின்றது?
ஆறுகள் மற்றும் கடல்களின் மீது பாலங்கள் கட்டுவதில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய நுட்பம் 'காஃபர்டேம்' ஆகும். இது ஒரு தற்காலிக, நீர் ஊடுருவ முடியாத கட்டமைப்பாகும், இதன் மூலம் ஆற்றின் ஒரு பகுதியில் தற்காலிகமாக நீரை வெளியேற்ற முடியும்.
இந்த காஃபர்டேம் காரணமாக நீருக்கு அடியில் அடித்தளம் அமைக்கும் பணியை பணியாளர்கள் எளிதில் மேற்கொள்ள முடிகின்றது.

காஃபர்டேமின் மூலம் அடித்தள பணியைத் பணிகளை ஆரம்பிக்கும் முன்னர் பொறியியலாளர்களால் ஒரு விரிவான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.
அதாவது ஆற்றின் ஆழம், மண்ணின் வலிமை மற்றும் நீர் ஓட்டத்தின் வேகம் என்பன முறையாக ஆராயப்பட்ட பின்னர் இந்த விவரங்களின் அடிப்படையிலேயே பாலம் எத்தனை தூண்களைக் கொண்டிருக்க வேண்டும், எந்த ஆழத்தில் இருக்க வேண்டும் என்ற சகல விடயங்களும் தீர்மாணிக்கப்டுகின்றன.
காஃபர்டேமின் முறை போன்று இன்றும் சில நுட்ப முறைகளும் இவ்வாறு நீருக்கடியில் அடித்தளம் அமைக்கும் பணிகளில் பயன்படுத்தப்பட்டாலும், இந்த முறை மிகவும் பிரபல்யமானதாகவும் சுலபமானதாகவும் அறியப்படுகின்றது.

காஃபர்டேம்கள் மெல்லிய மற்றும் பெரிய எஃகுத் தாள்களால் (தாள் குவியல்கள்) செய்யப்படுகின்றன. அவை 10-20 மீட்டர் நீளம் கொண்டவையாகும்.அவை ஒரு ஹைட்ராலிக் சுத்தி அல்லது அதிர்வு உதவியுடன் ஆற்றுப் படுகைகளில் வைக்கப்படுகின்றன.
தாள்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமைக்கப்பட்டு ஒரு வட்ட அல்லது சதுர சுவரை உருவாக்க துணைப்புரிகின்றது. இதனால் குறித்த இடத்தில் மட்டும் தண்ணீர் உள்ளே நுழைவது தடுக்கப்படுகின்றது. இந்த நுட்பம் இந்தியாவில் பம்பாய் உயர்நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள தானே க்ரீக் பாலத்தில் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |