உங்கள் சிறிய வீட்டை அழகாக மாற்றவேண்டுமா? வாஸ்துப்படி இதை மட்டும் செய்யுங்க!
இன்றைய நவீன காலத்தில் அடக்கமான அல்லது சிறிய இடத்திற்குள் சகல வசதிகளோடு வாழும் முறையை பலரும் விரும்புகின்றனா்.
அதிலும் குறிப்பாக 1980 முதல் 1995 வரையிலான காலகட்டத்தில் பிறந்தவா்கள் மிக எளிதாக பராமாிக்கக்கூடிய வீடுகளில் வசிப்பதையே விரும்புகின்றனா்.
இதனால், புதிய வடிவங்களில் வீடுகளை வடிவமைக்கும் வடிவமைப்பாளா்கள், எல்லாவிதமான வசதிகளுடன் கூடிய சிறிய வீடுகளை வடிவமைப்பதில் முனைப்புடன் இருக்கின்றனா்.
அந்த வகையில், தற்போது திறந்தவெளி சமையலறைகள் மற்றும் ஸ்டூடியோ அப்பாா்ட்மென்டுகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகின்றன.
இருப்பினும், ஒரு சிறிய இடத்தில் அல்லது சிறிய அறையில் அல்லது சிறிய வீட்டில் வசிப்பது என்பது ஒரு சவாலான காாியம் ஆகும். ஏனென்றால், அந்த சிறிய அறையில் நமது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு மிகவும் கடினமாக இருக்கும்.
மேலும் அளவு குறைந்த சிறிய அறைகள், அவற்றில் வசிப்பவா்களுக்கு ஒரு இனம் புாியாத பயத்தை அல்லது மன இறுக்கத்தை ஏற்படுத்தும். அவா்களின் உடல் இயக்கங்களையும் குறைத்துவிடும்.
எனவே சிறிய வீடுகளில் அல்லது சிறிய அறைகளில் வசிப்பவா்கள் பின்வரும் குறிப்புகளைக் கடைப்பிடித்தால் அந்த அறைகளை பெரியதாகவும் அதே நேரத்தில் காற்றோட்டமாகவும் மாற்றலாம்.