காரசாரமாக காடை பெப்பர் கிரேவி! ஹோட்டல் ஸ்டைலில் செய்வது எப்படி?
ஹோட்டல் ஸ்டைலில் காரசாரமாக காடை பெப்பர் கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
வெங்காயம் - 2
சோம்பு - அரை ஸ்பூன்
சோம்பு பொடி - அரை ஸ்பூன்
சீரகப் பொடி - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
மிளகு பொடி - ஒன்றரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
மசாலா அரைக்க
சின்ன வெங்காயம் - 5
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 3
செய்முறை
காடையை நன்றாக சுத்தம் செய்து வெட்டி எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து அதில் சோம்பு, பொடியாக வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பின்பு இதனுடன் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்பு இடித்து வைத்திருக்கும் மசாலாவை இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
தொடர்ந்து மஞ்சள் பொடி, உப்பு, கரம் மசாலா, பெருஞ்சீரக பொடி இவற்றினை சேர்ந்து கலந்துவிடவும்.
சுத்தம் செய்து வைத்திருக்கும் காடையை அதனுடன் சேர்க்கவும். பின்பு மிளகு பொடி மற்றும் சீரகப் பொடி சேர்த்து நன்றாக கலந்துவிட்ட பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் மூடி வைக்கவும்.
தற்போது ஹோட்டல் ஸ்டைலில் காடை பெப்பர் கிரேவி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |