ஹோட்டல் ஸ்டைல் சுவையான சிக்கன் ப்ரைடு ரைஸ் வீட்டில் செய்வது எப்படி?
ஹோட்டல் ஸ்டைலில் சிக்கன் ப்ரைடு ரைஸ் வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான உணவுகளில் ஒன்று தான் சிக்கன். சிக்கனை பலவிதமாக சமைத்து சாப்பிடுவார்கள்.
சிலர் சைனிஸ் வகையான நூடுல்ஸ், ப்ரைடு ரைஸ் இவ்வாறாக கூட செய்து சாப்பிடுவார்கள். சிக்கன் ப்ரைடு ரைஸ் ஹோட்டலில் சென்று சாப்பிட்டால் இன்னும் அதிக சுவையுடன் இருக்கும்.
அந்த வகையில் ஹோட்டல் சுவையில் சுவையான சிக்கன் ப்ரைடு ரைஸ் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
சிக்கன் பொரிக்க
சிக்கன் போன்லெஸ் - 500 கிராம்
மிளகாய் பொடி - அரை ஸ்பூன்
காஸ்மீர் மிளகாய் பொடி - அரை ஸ்பூன்
மிளகு பொடி - அரை ஸ்பூன்
மல்லி பொடி - அரை ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
முட்டை - 1
இஞ்சி பூண்டு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
சோளமாவு - 1 ஸ்பூன்

முட்டை பொரிக்க
முட்டை - 4
உப்பு - ஒரு சிட்டிகை
மிளகு தூள் - ஒரு சிட்டிகை
சிக்கன் ரைஸ் செய்ய
எண்ணெய் - 3 ஸ்பூன் (சிக்கன் பொரித்தது)
இஞ்சி - பெரிய துஸண்டு ( துருவியது)
பூண்டு - 15 பல் (பொடியாக துருவியது)
பச்சை மிளகாய் - 2
பீன்ஸ் - 1 கப்
கேரட் - முக்கால் கப்
கோஸ் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
குடை மிளகாய் - 1 (நீளமாக வெட்டியது)
பாசுமதி சாதம் - 2 கப்
சில்லி சாஸ் - ஒன்றரை ஸ்பூன்
தக்காளி சாஸ் - இரண்டு ஸ்பூன்
சோயா சாஸ் - சிறிதளவு
மிளகு பொடி - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெங்காய தாள் - சிறிதளவு

செய்முறை
முதலில் சிக்கனை பொரிப்பதற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு முட்டையையும் தனியாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிக்கன் பொரித்த எண்ணெய்யை ஊற்றவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு இவற்றினை சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய், பீன்ஸ், கேரட், முட்டைக் கோஸ், குடை மிளகாய், உப்பு இவற்றினை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்பு வடித்து வைத்துள்ள சாதம், சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ், மிளகுபொடி, சாதத்திற்கு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும். பொரித்து வைத்திருக்கும் முட்டை மற்றும் சிக்கன் இவற்றினையும் சேர்த்து கிளறவும்.
கடைசியாக வெங்காய தாளை தூவி இறக்கினால் சிக்கன் ப்ரைடு ரைஸ் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |