Ethirneechal: தேவகியின் உயிரைப் பறித்த குணசேகரன்... பரபரப்பான எதிர்நீச்சல் பின்னணி
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தேவகியினை கொலை செய்யும் ப்ரொமோ காட்சி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கின்றது. சக்தி உண்மையைத் தேடி ராமேஷ்வரம் சென்றுள்ளார்.
ஆனால் தனது உண்மை வெளியே வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் குணசேகரன் சக்தியை கொலை செய்வதற்கு ஆட்களையும் அனுப்பியுள்ளார்.
குணசேகரன் அப்பாவின் இரண்டாவது மனைவியான தேவகிக்கு ஒரு மகனும் உள்ளது குணசேகரனுக்கு தெரியவரவே, தேவகியை ஊரைவிட்டே காலிசெய்யக் கூறி மிரட்டியுள்ளார்.
பின்பு தந்தையின் இறப்பிற்கு பின்பு தேவகியையும் அவரது மகனையும் கொலை செய்வதற்கு ஆட்களை அனுப்பி துரத்தியுள்ளார். ஆனால் அத்தருணத்தில் இரண்டு பேரும் உயிர் தப்பித்து விடுகின்றனர்.

அதன்பின்பு குணசேகரனிடம் மாட்டிக் கொண்ட தேவகியை குணசேகரன் கத்தியால் குத்தி மகன் கண்முன்னே கொலை செய்து விடுகின்றார்.
ஆனால் குணசேகரனிடமிருந்து தப்பித்த தேவகியின் மகன் ராணா தற்போது எங்கிருக்கின்றார் என்று சக்தி சாமியாரிடம் கேட்டுள்ளார்.
அவர் தான் அவர் இருக்கும் இடத்தினைக் கூறி உன்னை சங்கடப்படுத்தவிரும்பவில்லை என்று கூறியுள்ளார். குணசேகரின் மற்றொரு கொலைகார முகம் தெரிந்த வீட்டு பெண்கள் அரண்டு நடுங்கி போயுள்ளனர்.
தற்போது கதையின் போக்கு பயங்கரமாக சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்து என்ன நடக்கவிருக்கின்றது என்பதை அறிய பார்வையாளர்கள் ஆவலாக இருந்து வருகின்றனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |