Bigg Boss: பிக்பாஸிடம் கதறியழுத சபரி! ராஜாவாக இருந்த தர்பீஸின் பரிதாபநிலை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை அட்டகாசமாக விளையாடி வந்த சபரியை வீட்டில் பெரும்பாலான போட்டியாளர்கள் குற்றம்சுமத்தியதால் பிக்பாஸிடம் வந்து கதறி அழுதுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரியாலிட்டி நிகழ்ச்சியாக பிக்பாஸில் கடுமையான சலசலப்பு ஏற்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் 20 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் மேலும் வைல்டு கார்டு போட்டியாளர்கள் நான்கு பேர் சென்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு வரை ஏழு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று புதிய டாஸ்க் ஒன்றினை பிக் பாஸ் கொடுத்துள்ளார்.
மேலும் இதுவரை சரியாக விளையாடிக் கொண்டிருந்த சபரியை வீட்டிலுள்ள பெரும்பாலான போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் தான் செய்வது தவறுதானா? என்ற மனநிலைக்கு வந்துள்ள சபரி கன்பெஷன் அறைக்கு சென்று பிக்பாஸிடம் அழுதுள்ளார்.

பிக்பாஸ் சபரிக்கு சமாதானம் கூறி அனுப்பியதுடன், நீங்கள் உண்மையாக விளையாடினால் மக்கள் அதற்கான அங்கீகாரத்தினை கொடுப்பார்கள் என்று கூறினார்.
முதல் ப்ரொமோ காட்சியில் இன்று புதிய டாஸ்க் ஆரம்பித்துள்ளது. பிக்பாஸ் இரண்டு சாம்ராஜியமாக பிரிந்துள்ளது. ஒன்று கானா சாம்ராஜ்யம், மற்றொன்று தர்பூஸ் சாம்ராஜ்யம் என்று மாறியுள்ளது.
இதன் ஒரு கட்டத்தில் ராஜாவாக இருக்கும் தர்பூஸின் அலங்காரத்தை அனைத்தையும் பறித்துக்கொண்டு அசிங்கப்படுத்தியுள்ளனர் கானா சாம்ராஜ்யத்தினர்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது ப்ரொமோ காட்சியில் சபரி மற்றும் பிரஜன் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் பெரும்பாலான நபர்கள் சபரியைக் குற்றப்படுத்தி பேசியதால் மனம்உடைந்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |