இந்த ராசி பெண்களின் கோபம் மிகவும் ஆபத்தானது! இவர்களிடம் ஜாக்கிரதை
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்துவ குணங்கள் இருப்பது இயல்பு தான். ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்ச்சதிரமானது இவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் எல்லாவற்றிற்கும் உடனடியாக எதிர்வினையாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் கோபத்தை தூண்டினால் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.

அப்படி கோபத்தில் எந்த எல்லைக்கும் செல்ல கூடிய தீவிர ஆற்றல் கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

நெருப்பு ராசியாக அறியப்படும் மேஷ ராசி பெண்கள் தங்களின் ஆளுமைக்கும் தன்னம்பிக்கைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் எப்போதும் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாக உறுதி செய்து விட்ட பின்னரே அவர்களின் இலக்கு நோக்கி நகர ஆரம்பிக்கின்றார்கள். இவர்கள் சூழ்நிரலை சாதகமாக அமையும் வரையில் காத்திருக்க மாட்டார்கள்.
தங்களுக்கு தேவையானதை உடனடியாக பெறும் ஆற்றல் மற்றும் பிடிவாதம் இவர்களிடம் இயல்பிலேயே இருக்கும்.
இயல்பில் மிகவும் அன்பானவர்களாக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால் வேறு நபர் போல் நடந்துக்கொள்வார்கள். இவர்களின் கோபத்தை கட்டுப்படுத்துவதும் மிகவும் சவாலான விடயமாக இருக்கும்.
சிம்மம்

சிம்ம ராசி பெண்கள் சூரியனால் ஆளப்படுவதால் எந்த இடத்திலும் அவர்கள் தான் ராணியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பர்கள். இவர்களின் நிலை இறங்கும் போது இவர்களின் கோபம் மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.
இவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவதை மட்டுமெ விரும்புகின்றார்கள். மேலும் அவர்களின் கருத்துக்கள் புறக்கணிக்கப்படுவதை உணரும்போது, இவர்களின் நடத்தையில் கட்டுக்கடங்காத கோபம் வெளிப்படும்.
இருப்பினும், அவர்கள் ஒருபோதும் வெறுப்புணர்வை வைத்திருக்க மாட்டார்கள் கடுமையான கேபத்தை வெளிப்படுத்திய பின்னர் அமைதியாக மாறிவிடுவார்கள். இவர்களின் கோபத்தை விட அந்த அமைதி மிகவும் ஆபத்தானது.
விருச்சிகம்

மர்மமான மற்றும் ரகசிய இயல்புக்கு பெயர் பெற்ற விருச்சக ராசி பெண்கள் இயல்பாகவே யாரிடடும் தங்களிக் தனிப்பட்ட பிரச்சினைகளை பகிர்ந்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.
ஆனால் இவர்கள் யார் மீதாவத கோபத்தில் இருக்கின்றார்கள் என்றால், அதை விட்டு விலகிச் செல்வது நல்லது.இவர்களின் கோபம் யாரும் எதிர்பாராத அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இவர்களின் அன்பு மற்றும் காதல் எந்தளவுக்கு ஆழமானதாக இருக்குமோ அதை விட பல மடங்கு அவர்களின் கோபம் ஆழமானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |