உலகின் விலை உயர்ந்த நண்டு ரத்தம் தெரியுமா? பலரும் அறியாத உண்மை
உலகில் மிகவும் விலை அதிகம் உள்ள நண்டின் ரத்தத்தினைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
குதிரைவாலி நண்டு (Horseshoe Crab)
பூமியில் கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்துவரும் நிலையில், இதில் சிலவற்றின் மதிப்பு மட்டும் உச்சத்தில் இருக்கின்றது.
மனித வாழ்க்கை பல விலங்குகளை சார்ந்துள்ள நிலையில், சில உயிரினங்களின் ரத்தம் மனிதர்களின் உயிரை காப்பாற்றுவதற்கும் கூட மருத்துவத்தில் உதவுகின்றது.
அதில் ஒன்று தான் குதிரைவாலி நண்டு(Horseshoe Crab) ஆகும். 1960ம் ஆண்டில் விஞ்ஞானிகள் இந்த ரத்தத்தினைப் பயன்படுத்திய நோய்க்கிருமி பாக்டீரிரயாவின் நிமிட அளவைக் கூட அடையாளம் காணமுடியும் என்று கண்டறிந்துள்ளதுடன், மருத்துவ துறையிலும் பயன்படுத்தப்படுகின்றது.
குறித்த நண்டு டைனோர்களை விட 450 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாகும். நண்டுகளின் கலப்பு ரத்தத்தில் ஹீமோசயனின் உள்ளதால், நீல நிறமாக ரத்தம் காணப்படுகின்றது. மேலும் இது செப்புத் தளத்துடன் கூடிய சுவாச நிறமியாகும்.
இந்த நண்டின் ரத்தம் நீல தங்கம் என்று குறிப்பிடப்படும் நிலையில், 1 லிட்டர் ரத்தத்தின் விலை இந்திய மதிப்பில் தோராயமாக 12 லட்சம் என்று கூறப்படுகின்றது.
இந்த நண்டின் ரத்தத்தில் லிமுலஸ் அமெபோசைட் லைசேட்(LAL) என்ற புரதம் உள்ள நிலையில், இவை மருந்து தயாரிப்பிற்கும், மரணிக்கும் தருவாயில் கூட மனிதர்களை மீட்டு கொண்டுவரும் மருத்துவ குணம் கொண்டுள்ளது.
[
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |