செப்டம்பர் மாதம் பணமழையில் நனையப்போகும் 5 ராசிகள் யார் யார்? நிதி நிலை சூப்பரா இருக்கும்!
செப்டம்பர் மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளது.
இப்படிப்பட்ட கிரக மாற்றங்களால் பல ராசிக்காரர்களின் நிதி நிலை சிறப்பாக இருப்பதோடு, இம்மாதத்தில் செய்யப்படும் முதலீடுகள் நன்மை பயப்பனவாக இருக்கும்.
இப்போது செப்டம்பர் மாதத்தில் 12 ராசிக்காரர்களின் நிதி நிலை மற்றும் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
பணிபுரியும் மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் சிறப்பாக இருக்கும். வேலையில் நீங்கள் திட்டமிடும் அனைத்தும் நிறைவேறும். நிதி முன்னேற்றத்திற்கான விஷயங்கள் நடக்கும். இம்மாதத்தில் செய்யும் முதலீடுகள் வெற்றியைத் தரும்.
ரிஷபம்
செப்டம்பர் மாதத்தில் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நல்ல நிதி ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாதத்தின் ஆரம்பத்தில் நிதியைப் பற்றிய நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். இம்மாதத்தில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், அதை தள்ளிப் போடுவது நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் நிதியைப் பொறுத்தவரை, நல்ல அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்களின் நல்ல செயல்களால் உங்களைத் தேடி செல்வம் வரும். நல்ல வருமானம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் நிதி நிலை சிறப்பாக இருக்காது. வேலையில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் செலவுகளும் அதிகமாக இருக்கும். ஆனாலும், மாத இறுதியில் நிதி நிலைமையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களின் வருமானம் அதிகரிக்கும் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். இம்மாதத்தில் உங்களின் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆனால் உங்களை தோற்கடிக்க முடியாது. நிதி ரீதியாக, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையை மாற்ற நினைத்தால், இம்மாதத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தை பெறுவார்கள். அதிக பணத்தை வேகமாக சம்பாதிக்க ஆசைப்பட்டால், பிரச்சனையை சந்திப்பீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் கலவையானதாக இருக்கும். பணிபுரிபவர்கள் வெற்றியைப் பெற கடினமாக உழைக்க வேண்டும். நிதியைப் பொறுத்தவரை, இம்மாதத்தில் நிறைய செலவுகளை செய்ய நேரிடும். இம்மாதத்தில் முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக சாதகமான மாதமாக இருக்கும். பணிபுரிபவர்கள் இம்மாதத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். உங்கள் பணிகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள் இதனால் பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். வியாபாரிகளுக்கு இம்மாதத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கு. வியாபாரிகள் நல்ல பலனைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றமும், எதிர்பார்த்த முடிவுகளும் கிடைக்கும்.
இல்லாவிட்டால் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வேலையில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள், உங்கள் உத்திகளை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். அபரிமிதமான பண ஆதாயங்கள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக செப்டம்பர் மாதம் கலவையானதாக இருக்கும். பணியிடத்தில் சில தடைகளை சந்திப்பீர்கள். சற்று கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் உற்பத்தித்திறன் குறையாமல் இருக்க வேண்டும். மாதத்தின் இரண்டாம் பாதியில் புதாதித்ய யோகத்தால் பணியிடத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக செப்டம்பர் மாதத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் வேகமாக வளரும். மேலும் பணியிடத்தில் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள்.
வணிகத்துடன் தொடர்புடையவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலையை மாற்ற விரும்பினால் அல்லது வேலை தொடர்பான முக்கியமான முடிவை எடுக்க விரும்பினால், அதற்கு இது நல்ல நேரமாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். நிதியைப் பொறுத்தவரை, நல்ல பண பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமானது தொழில் ரீதியாக சாதகமான பலன்களைத் தரும். பணிபுரிபவர்களின் நிலை வலுபெறும். முன்னேற்றத்திற்கான நல்ல தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வணிகர்களுக்கு இம்மாதம் சாதகமாக இருக்கும். மொத்தத்தில் சிறு முயற்சியிலும் நல்ல பலன்கள் கிடைக்கும் மாதமாக இருக்கும். நிதியைப் பொறுத்தவரை, கலவையானதாக இருக்கும்.
செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் ஆசைகளை நிறைவேற்ற அதிக பணத்தை செலவிடுவீர்கள். குடும்ப பொறுப்புக்களையும் நிறைவேற்ற அதிக பணத்தை செலவிடலாம்.