எப்பொழுதும் இளமையாக இருக்க வேண்டுமா? தேன் செய்யும் அற்புதம்
தேனை முகத்திற்கு தடவினால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேன்
இனிப்பு சுவையைக் கொண்ட தேனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிகமான சத்துக்களைக் கொண்டதுடன், எண்ணற்ற நன்மையையும் அளிக்கின்றது.
மருத்துவ குணங்கள் நிறைந்த தேன், செரிமானத்தை மேம்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதுடன், உடலை ஆற்றலுடனும் வைத்திருக்க உதவுகின்றது.

சர்க்கரைக்கு மாற்றாக தேநீர், ஸ்மூத்தி, சாலட் இவற்றிற்கும் பயன்படுத்துகின்றனர். காலையில் சுடுதண்ணீரில் தேன் கலந்து குடிப்பது ஆரோக்கியம் என்றும் கூறப்படுகின்றது.
இவ்வாறு உடம்பிற்கு இவ்வளவு ஆரோக்கியத்தை அளிக்கும் தேனை முகத்திற்கு பயன்படுத்தினால் என்னென்ன நன்மையினைப் பெறலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
முகத்திற்கு தேன்
தேனில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பாதிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிடமிருந்து பாதுகாப்பதுடன், கொலாஜன் உற்பத்தியினை அதிகரித்து சறுமத்தை இறுக்கமாக வைத்து, இளமையாகவும், பிரகாசமாகவும் வைக்கின்றது.
வறண்ட சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை நீக்கி, முகத்தை பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற்றுவதற்கு தேன் உதவுகின்றது.

தேன் சருமத்தில் உள்ள தேவையற்ற பாக்டீரியாக்களை அழிக்கும் திறனைக் கொண்டுள்ளதுடன், முகப்பருக்களால் அவதிப்படுகிறவர்களுக்கு சிறந்த தீர்வாகவும் அமைகின்றது.
சருமத்தில் எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் இருப்பதுடன், ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள், முகத்தில் தேன் தடவினால் சருமத்தில் உள்ள எரிச்சல் நீக்கி பாதுகாக்கின்றது.

ஆனால் தீவிரமான தோல் நோய் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்ற பின்பே தேனை முகத்திற்கு நேரடியாக பயன்படுத்தவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |