வரட்டு இருமலை நெருங்க விடாமல் விரட்டியடிக்கும் சக்தி வாய்ந்த இயற்கை பொருள் - யாரெல்லாம் எடுக்கலாம்?
இருமல் என்பதே மிக மிக அசெளகரியமான விஷயம் தான். தொடர்ந்து பேசக்கூட முடியாத அளவுக்கு இருமல் இருக்கலாம்.
தீவிர நிலையை எட்டுவதற்குள் சில கைவைத்தியங்கள் செய்து அதை கட்டுப்படுத்தலாம்.
வீட்டில் பெரியவர்கள் எலுமிச்சை, தேன் கொண்டு இருமலை எப்படி போக்குவது அல்லது கட்டுப்படுத்துவது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
இருமலுக்கு தேன் எலுமிச்சை வைத்தியம்
எலுமிச்சை மற்றும் தேன் இருமலை எதிர்த்து போராட உதவும். இது எளிதாக கிடைக்கும் பொருள்களும் கூட.
எளிமையான முறையில் தயாரிக்கப்படும் இதை குழந்தைகள், டீன் ஏஜ் வயதினர், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என அனைவருமே பாதுகாப்பாக கவனமாக அளவாக பயன்படுத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும். இருமலுக்கு தேன் எலுமிச்சை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
இருமல் சிகிச்சைக்கு தேன் மற்றும் எலுமிச்சை சாறுடன் கூடிய மிக எளிமையான செய்முறை இது.
எப்படி தயாரிப்பது?
- தேன் - 1 கப்
- எலுமிச்சை - 3 டீஸ்பூன்
- சூடான நீர் - கால் கப்
எலுமிச்சை மூன்று தேக்கரண்டி சாறுடன் ஒரு கப் தேன் சேர்க்கவும். இதில் வெதுவெதுப்பான நீர் சேர்த்து தேன் மற்றும் தண்ணீர் இரண்டும் சேரும் வரை கலந்து விடவும். பிறகு இதை கண்ணாடி பாட்டிலில் ஊற்றி மீண்டும் நன்றாக குலுக்கி எடுக்கவும்.
தினமும் மூன்று வேளை ஒரு டீஸ்பூன் அளவு இதை எடுத்துவரலாம். மீதமிருப்பவற்றை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். குறிப்பு நீங்கள் இருமலுக்கு தேன் மற்றும் எலுமிச்சை பயன்படுத்தும் போதெல்லாம் ஆர்கானிக் தேன் மற்றும் புதிய எலுமிச்சை சாறை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள்.
தேனில் நீர் சேர்க்கும் போது கொதிக்கும் நீரை சேர்க்க வேண்டாம்.
வெதுவெதுப்பான வெப்பநிலையை பராமரியுங்கள். அப்போதுதான் முடிவு பலனளிக்கும்.