மறந்தும் இத சாப்பிடாதீங்க.. நாய் கடியால் ஆபத்து வரும்
நாய் வளர்ப்பது என்றால் நம்மிள் பலருக்கும் பிடிக்கும். பெரும்பாலானோர் வீடுகளில் நாய்கள் வளர்ப்பது தான் பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்கள்.
அப்படி வளர்க்கும் பொழுது சில சமயங்களில் நாய் கடித்து விட்டால் அதனை அலட்சியமாக விட்டு விடக்கூடாது. சில நாய்கள் கடித்தால் உடல் நலத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
உதாரணமாக, ரேபிஸ் போன்ற மோசமான தாக்கத்திற்கு வழிவகுக்கும்.
எனவே, நம் வீட்டில் வளர்க்கும் நாயாக இருந்தாலும் சரி, தெருவில் இருக்கும் நாயாக இருந்தாலும் சரி கடி வாங்கியவுடன் உரிய சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில், நாய் கடித்து விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
நாய் கடித்த பிறகு சாப்பிட கூடாத உணவுகள்
1. இனிப்புகள்
நாய் கடித்தவுடன் இனிப்பு சாப்பிட்டால் வீக்கம் ஏற்படும். மெதுவான காயங்கள் குணமடையவும் வாய்ப்பு உள்ளது. வேறு சில பிரச்சனைகளும் சில சமயங்களில் ஏற்படலாம்.
2. கடினமான உணவுகள்
வாய்க்கு அருகில் அல்லது முகத்தில் ஏதாவது ஒரு பகுதியில் நாய் கடித்து விட்டால் கடினமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படி காயம் இருந்தால் அந்த நிலை வழக்கத்தை விட மோசமாகும்.
3. பால் பொருட்கள்
பால், தயிர், பன்னீர் போன்ற பால் சார்ந்த பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை உடலில் சளியை உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல், பாக்டீரியா உற்பத்தியையும் அதிகப்படுத்தும். நோய் தொற்றுக்கள் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
4. மதுபானம்
நாய் கடி வாங்கிய பிறகு மதுபானம் அருந்தக்கூடாது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். வேறு விதமான நோய் தொற்று அபாயத்தை ஏற்படுத்தும்.
5. காரமான உணவுகள்
புளிப்பு காரம் போன்ற உணவுகள் காயத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். எரிச்சலுடன் கூடிய வலி உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
