சுவாச பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? சித்த மருத்துவ தீர்வு
சுவாச பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வினைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
சுவாச பிரச்சனை
சுவாச பிரச்சனை மற்றும் ஆஸ்துமா, நுரையீரல் ஒவ்வாமை என்பது இன்று உலகளவில் அதிகமாக காணப்படுகின்றது.
இந்நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சுக்குழாய் வீக்கம், தசைகளின் சுருக்கம் இதன் காரணமாக நுரையீரலுக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகின்றது.
இதற்கு சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்வோம்.
வழிமுறைகள் என்ன?
கிராம்பு, லவங்கப்பட்டை, மிளகு, மஞ்சள், சுக்கு இவற்றினை தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து குடித்து வந்தால், ரத்த ஓட்டம் மேம்படுவதுடன், ஆக்ஸிஜன் அதிகரித்து புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
துளசி, கற்பூரவள்ளி, ஆடாதோடை இலை சாற்றை தேனில் கலந்து 5 முதல் 10 மில்லி அளவு வரை எடுத்துக் கொள்ளலாம்.
இதே போன்று நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், இருமல் மற்றும் சளி தொல்லைகளை நீக்க நெல்லிக்காய் லேகியத்தை எடுத்துக் கொள்ளலாம்.
நுரையீரலை வலுப்படுத்த தினமும் 10 துளசி இலைகளைச் சாப்பிடலாம்.
தூதுவளை இலைகளைப் பயன்படுத்தி ரசம் செய்து உணவோடு சேர்த்து உண்ணலாம்.
சிற்றரத்தைப் பொடியை தேன் அல்லது பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்ண நுரையீரல் வலுப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |