வாரத்திற்கு இரண்டு தடவ போடுங்க.. வறண்டு போன முகம் பளபளப்பாகும்
மழைக்காலம் வந்து விட்டால் பெரும்பாலானவர்கள் முகம் வறண்டு போனது போன்று இருக்கும். இதனால் அவர்களின் முகப்பொலிவு குறைந்து, பார்ப்பதற்கு கவலையாக இருப்பவர்கள் போன்று இருப்பார்கள்.
இது போன்ற சரும பிரச்சினைகளை தடுக்க நினைப்பவர்கள் மாய்ச்சரைசர் போடுவார்கள். ஆனால், சில மாய்ச்சரைசர்கள் சிறிது நேரத்திற்குப் பிறகு முகத்தை மீண்டும் வறட்சியடையச் செய்யும்.
இதனால் கடைகளில் விற்பனை செய்யப்படும் க்ரீம்களை விட வீட்டிலேயே உள்ள பொருட்களை வைத்து க்ரீம் தயாரிக்கலாம்.
இது முகத்தை மென்மையாக்கி, பொலிவை அதிகப்படுத்தும். வறண்ட சருமம் உள்ளவர்கள் சமையலறை உள்ள பொருட்களை பயன்படுத்தி சருமத்தை பொலிவாக்கலாம்.
அந்த வகையில், வறண்ட சருமத்திற்கு பொலிவு கொடுக்கும் க்ரீம் எப்படி தயாரிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாலாடை- ஒரு டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
- கடலை மாவு- அரை டீஸ்பூன்
- ரோஸ் வாட்டர் - சில துளிகள்
க்ரீம் எப்படி தயாரிக்கலாம்?
முதலில் ஒரு சுத்தமான கிண்ணத்தில் பாலாடையை எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். அதில் மஞ்சள், கடலை மாவு மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டர் ஆகிய பொருட்களை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த க்ரீம்மை முகம் வறண்டு போய் இருக்கும் பொழுது முகத்தில் தடவலாம்.
அதன் பின்னர், முகத்தை ஒரு பஞ்சு துண்டை பயன்படுத்தி துடைக்கலாம்.
அப்படி இல்லாவிட்டால் முகத்தை நன்றாக சுத்தம் செய்தவுடன் க்ரீமை கண்கள் மற்றும் உதடுகளைத் தவிர மற்ற இடங்களுக்கு தடவலாம். 15 நிமிடங்கள் அப்படியே விடவும்.
மாஸ்க் சிறிது காய்ந்தவுடன் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு தடவை செய்து வந்தால் முகம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும்.
என்ன செய்தாலும் வறண்டு போய் இருக்கும் சருமம் அழகாக இருக்கும். பால் க்ரீம், மஞ்சள் பயன்படுத்துவதால் முகத்திலுள்ள அழுக்குகள், பாக்ரீயாக்கள் இல்லாமல் போகும். மழைக்காலத்தில் மின்னும் சருமத்தை பெற நினைப்பவர்கள் இதனை அடிக்கடி செய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |