ஹேர் கலரிங் செய்ய விருப்பமா? கெமிக்கல் இல்லாமல் வெறும் பீட்ரூட் மட்டும் போது...
பொதுவாகவே பெண்களுக்கும், ஆண்களுக்கும் முடியை பராமரிப்பது என்பது மிகவும் விருப்பமானதொன்று தான்.
ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் சிறியவர்களுக்கும் நரைமுடி வந்து அழகையே சிதைத்து விடுகிறது.
அது மட்டுமில்லாமல் சிலர் தங்களின் முடியை அழகுப்படுத்திக் கொள்வதற்காகவும் ஹேர் கலரிங் செய்துக் கொள்வார்கள். இப்படி நரைமுடியை மறைப்பதற்காகவும் கூத்தலை அழகுப்படுத்திக் கொள்வதற்காகவும் பலரும் கடைகளில் ஹேர் கலர்களை வாங்குவார்கள் அப்படியானவர்களுக்கு இனி கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம் அதுவும் பீட்ரூட்டை கொண்டு.
பீட்ரூட் ஹேர் கலரிங்
இந்த பீட்ரூட் ஹேர் கலரிங் செய்வதற்கு ஒரு சிறிய பௌலில் துருவிய பீட்ரூட்டை 2 கப் தண்ணீரில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
கொதிக்க வைத்த தண்ணீர் பாதியான பிறகு இறக்கி ஆற வைக்க வேண்டும். பிறகு அந்த நீரை வடிகட்டி விட்டு வேகவைத்த பீட்ரூட்டை அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் அரைத்து எடுத்த பீட்ரூட் மற்றும் வடிகட்டிய நீரை ஒன்றாக கலந்து ஹென்னா பவுடரை சேர்த்து பேஸ்ட் போல செய்து 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பாவனைமுறை
தயாரித்து எடுத்துக் கொண்ட பேஸ்ட்டை தலைமுடியில் தடவி 5 மணிநேரம் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஹேர் கலரானது ஒரு வாரத்திற்கு தலையில் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |