சீனர்கள் போல காரசாரமா சாப்பிட ஆசையா? இந்த சில்லி எண்ணெய் சீக்ரெட் செய்ங்க
பலருக்கும் சீனர்கள் போல சாப்பிட ஆசை இருக்கும். அவர்கள் தங்கள் உணவை சுவையூட்ட சில்லி எண்ணெய் பயன்படுத்துகிறார்கள்.
இந்த எண்ணெய் செய்து வைத்திருந்தால் காரசாரமாக எதாவது சாப்பிட ஆசைப்படும் போது அதை இன்ஸ்டன்ட் ஆக பயன்படுத்தலாம்.
இதை நூடில்ஸ் பாண் இன்னும் நமக்கு பிடித்த பல உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- 1 கப் தாவர எண்ணெய்
- 3-4 நட்சத்திர சோம்பு
- 2முழுதாக 2 பிரியாணி இலைகள்
- 1 சிறிய வெங்காயம்
- துண்டுகளாக்கப்பட்ட 4-5 பூண்டு பல்
- நறுக்கிய ½ கப் சிவப்பு மிளகாய் துண்டுகள்
- 2 தேக்கரண்டி எள்
- 1 தேக்கரண்டி சோயா சாஸ்
- உப்பு சுவைக்கேற்ப

செய்யும் முறை
முதலில் மிளகாய் கிரிஸ்பியாக மாறும் வரை, பாத்திரமொன்றில் சேர்த்து வறுக்கவும். ஒரு மிக்ஸியில் வறுத்த மிளகாய், பூண்டு, வெங்காயம், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கரடுமுரடாக அரைக்கவும்.
கலவையை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். பின்னர் கலவையில் அன்னாச்சி பூ, மிளகு, டார்க்க சோயா சாஸ் சேர்க்கவும். சூடான எண்ணெயை ஊற்றி நன்கு கலக்கவும்.

அவ்வளவு தான் எல்லோருக்கும் பிடித்த மிளகாய் எண்ணெய் இப்போது தயாராக உள்ளது. இதை உங்களுக்கு பிடித்த சீன ரெசிபிகளில் பயன்படுத்தி சாப்பிடலாம்.
இல்லை விரும்பினால், கிச்சடி, அல்லது சூப்களில் கூட இதை சேர்க்கலாம். இந்த மிளகாயட எண்ணெய்யை காற்று புகாத ஜாடிக்கு மாற்றி, மூன்று வாரங்கள் வரை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |