சாப்பிட்ட உடனே டாய்லெட்டா? இதற்கான மிக எளிய தீர்வுகள்
ஒரு சிலர் சாப்பிட்டு முடித்ததும், கழிப்பறை செல்வார்கள், அப்படிபட்டவர்களுக்கு எங்கு சென்றாலும் சிரமமாக இருக்கும், இதை யாரிடமும் கூறவும் இயலாது.
சாப்பிட்டதும் கழிப்பறை நோக்கி செல்பவர்களின் பிரச்சனையை காஸ்ட்ரோ-கோலிக் ரிஃப்ளக்ஸ் என்று அழைப்பார்கள்.
சரியான நேரத்தில் மலம் கழிக்காமல் அடக்கி வைத்திருப்பவர்களுக்கு பெரும்பாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த சிக்கலை எளிதாக வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்யலாம், அவை என்னென்ன என பார்க்கலாம்.
* இந்த சிக்கலைத் தவிர்க்க, 50 கிராம் இனிப்பு மாம்பழ (Mangoes) சாற்றில் 10-20 கிராம் இனிப்பு தயிர் மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து குடிக்கவும். சில நாட்களுக்கு தினமும் இதைச் செய்தால் நோயாளிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
* 1 முதல் 6 கிராம் புளிப் பட்டை, 20 கிராம் தயிரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை (காலை மற்றும் மாலை) உட்கொண்டால், குழந்தைகளுக்கு இந்த பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
* தினமும் உலர்ந்த திராட்சை சாப்பிடுவதால், நம் வயிற்றில் உள்ள பிரச்சனைகள் நீங்கி தினமும் சீராக மலம் கழிப்பதில் உதவி கிடைக்கும். உலர்ந்த திராட்சையை ஊர வைத்தும் உட்கொள்ளலாம்.
* காரட், பீன்ஸ் போன்ற நார்சத்து மிகுந்த காய்கறிகளும், ஆரஞ்சு, சாத்துக்குடி, வாழைப்பழம் போன்ற பழங்களும் இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.
* காலை எழுந்தவுடனும், இரவு தூங்கும் முன்னும் வெந்நீர் (Water) குடிப்பது இந்த பிரச்சனைக்கு மிகவும் எளிதான நிவாரணமாகும்.