இரண்டு நாளில் தீர்வு.. இனி கொத்து கொத்தாக முடி கொட்டாது
பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு தங்களின் தலைமுடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும்.
இது முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவு பழக்கங்கள் காரணமாக இல்லாமல் போகிறது.
மெதுவாக கொட்ட ஆரம்பித்த தலைமுடி நாளடைவில் நன்றாக கொட்டி தலையையே வழுக்கையாக்கி விடுகிறது.
தலைமுடி உதிர்தல் அல்லது அலோபீசியா பிரச்சினையால் இளம் வயதில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில், தலைமுடி உதிர்வை கட்டுக்குள் வைக்கும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
1. தேங்காய் பால்
வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய் பூவில் இருந்து பால் எடுத்து, அந்த பாலை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வு பிரச்சினை குறையும்.
2. வெங்காய சாறு
வெங்காயத்தில் இருந்து பெறப்படும் சாற்றை வைத்து தலைமுடி பிரச்சினையை கட்டுக்குள் வைக்கலாம். இது மயிர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தலைமுடியை வேகமாக வளர வைக்கும். அதே போன்று வெங்காயச் சாற்றில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது கிருமிகள் மற்றும் ஒட்டுண்ணிகளில் இருந்து சிகிச்சையளிக்கும்.
3. கற்றாழை
ஆரோக்கியமான முடி வளர்ச்சியில் நேரடி தாக்கம் செய்யும் கற்றாழையில் அல்கலைசிங் பண்புகள் உள்ளன. இது தலைமுடியின் pH ஐ சமநிலைப்படுத்தும். இதனால் தலைமுடி வளர்ச்சி அதிகமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
