ரோபோ சங்கர் உயிரை காவு வாங்கிய நோய்.. அறிகுறிகளும், பாதிப்புகளும்
தற்போது இருக்கும் தவறான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவு பழக்கங்கள் காரணமாக ஏகப்பட்ட நோய்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் குடலில் இரத்தக் கசிவு.
குடலில் இரத்த கசிவு நோய் சில தவறான பழக்கங்கள் காரணமாக ஏற்படுகிறது.
இரத்தத்தை வாந்தி எடுக்கும் பொழுது அது பார்ப்பதற்கு காப்பித்தூள் நிறத்தில் அல்லது பிரகாசமான சிவப்பு நிறத்தில் இருந்தால் அது அந்நபரின் ஆபத்தான நிலையை குறிக்கும்.
அதே போன்று இன்னும் சிலருக்கு கருப்பு, தார் நிற மலம் (மெலினா) அல்லது மலத்தில் பிரகாசமான சிவப்பு ரத்தம் (ஹீமாடோசீசியா) வெளியேறும்.
இது போன்று அறிகுறிகள் பார்த்தால் அதனை உடனே மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும். மருத்துவர்களின் அறிக்கையின்படி, மறைந்த நடிகர் ரோபோ ஷங்கருக்கு குடலியல் இரத்தக்கசிவு நோய் தான் காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நோயின் தாக்கத்தை முன்னரே அறிந்தவர்கள் முறையான உணவுப்பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தால் உயிரை கொஞ்ச நாட்கள் பிடித்து வைக்கலாம்.
அந்த வகையில், குடலியல் இரத்தக்கசிவு நோய் வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகளை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
1. இரைப்பை குடல் இரத்தப்போக்கு
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பேசும்பொருளாக இருக்கும் ரோபோ சங்கரின் மரணத்திற்கு இரைப்பை குடல் இரத்தப்போக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிறு மற்றும் குடலில் கடுமையான இரத்தப்போக்கு இருக்கும். இதனால் உடலில் உள்ள பல உறுப்புக்கள் மெதுமெதுவாக தன்னுடைய செயல்பாட்டை இழந்து திடீர் நிலைமாற்றத்தை ஏற்படுத்தும்.
2. மலம் வெளியேற்றத்தில் வேறுபாடு
பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் கூடிய மலம் வெளியேறும். ஏனெனின் குடலில் இரத்தக்கசிவு இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும்.
3. இரத்த வாந்தி எடுத்தல்
இரைப்பை குடல் இரத்தப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாந்தி எடுக்கும் பொழுது அதனுடன் ரத்தம் வெளியேறும். அது பார்ப்பதற்கு சிவப்பு அல்லது காபி தூள் போலக் கருப்பு நிறத்தில் இருக்கும். இதுஉணவுக்குழாயில் கடுமையான இரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதை உறுதிச் செய்கிறது
4. திடீர் மயக்கம்
குடலில் இரத்தப்போக்கு அதிகரிக்கும் பொழுது திடீர் மயக்கம், தலைசுற்றல், பலவீனம், வியர்வை போன்ற அறிகுறிகள் காணப்படும். இது இரத்த அழுத்தம் ஆபத்தான அளவில் குறைந்து கொண்டு வருவதை உணர்த்துகிறது.
5. இதயம் வேகமாக துடிப்பது போன்ற உணர்வு
மனிதர்களின் உடலின் இரத்த இழப்பை சமநிலைப்படுத்த இதயம் வேகமாக துடிப்பது போன்று உணர்வு இருந்தால் அதுவும் ரத்தக்கசிவின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. எந்தவித காரணமும் இல்லாமல் அதிகமான இதயத் துடிப்பு மற்றும் சுவாச சிரமம் இருந்தால் உயிருக்கு ஆபத்தாக அமையலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
