அதிக மருக்கள் அசிங்கமா இருக்கா? வாரம் ஒரு முறை இதை செய்ங்க மருக்கள் உதிரும்
மருக்கள் என்பது உடலில் எங்கு வேண்டுமானாலும் வரும். முகத்தின் எந்த பகுதியிலும் உண்டாகலாம். இது உடனடியாக சரியாக கூடிய சரும பிரச்சனையாக இருக்காது.
சில நேரங்களில் பல வருடங்கள் வரை இவை உடலில் இருக்கலாம். இந்த மருக்கள் மனித பாப்பிலோமா வைரஸால் தோலில் ஏற்படும் புடைப்புகள் ஆகும்.
இவை பெரும்பாலும் கைகளிலும் கால்களிலும் வளரக்கூடியது என்றாலும் உடலில் தோலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம். அது வரும் இடத்தை பொறுத்து அதன் சௌகரியம் அமையும்.
இது எந்தவிதமான பாதிப்பையும் கொடுக்காது என்றாலும் அது பார்ப்பற்கு ஒரு வித அருவருப்பாகவும் அசிங்கமாகவும் இருக்கும். எனவே இந்த பிரச்சனைக்கு தீர்வு கட்ட வீட்டு வைத்தியம் என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்.
மருக்களை எப்படி உதிர்ப்பது
மருக்கள் தோலில் ஏற்படும் வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகின்றன, குறிப்பாக மனித பாப்பிலோமா வைரஸ் (HPV). சில மருக்கள் காலப்போக்கில் தானாகவே மறைந்துவிடும், ஆனால் மற்றவை அளவு பெரியதாகி தொடர்ந்து வளரும்.
ஆப்பிள் சீடர் வினிகர் - ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு இயற்கையான ஆன்டிவைரல் மற்றும் கிருமி நாசினியாகும். இது மெதுவாக மருக்கள் செல்களைக் கொல்லும் என கூறப்படுகின்றது.
இதற்கு ஆப்பிள் சீடர் வினிகரில் ஒரு பஞ்சு அதை நனைத்து, மருவின் மீது தடவி, அதை ஒரு கட்டுடன் மூடி வைக்கவும். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் கழுவவும். இதை தொடர்ந்து செய்து வர மருக்கள் வறண்டு உதிரும்.
பூண்டு - பூண்டில் உள்ள அல்லிசின், மருக்கள் தொற்றுகளை நீக்க உதவும் ஒரு வைரஸ் தடுப்பு பொருளாகும். ஒரு பூண்டு பல் நசுக்கி, மருக்கள் மீது தடவி, ஒரு கட்டு கொண்டு மூடவும். இதை தினமும் செய்யவும். மருக்கள் கருமையாகி 7 முதல் 10 நாட்களுக்குள் உதிர்ந்து போகும். உதிரவில்லை என்றால் உதிரும் வரை இதை ஒரு சில நாட்கள் தொடர்ந்து செய்து வாருங்கள்.
வாழைப்பழத் தோல் - வாழைப்பழத் தோலில் மருக்களை நீக்க உதவும் நொதிகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. வாழைப்பழத் தோலின் உட்புறத்தை மருவின் மீது வைத்து, அதை ஒரு கட்டு கொண்டு மூடி, இரவு முழுவதும் அப்படியே விடவும். இதை தினமும் செய்வதால், மரு படிப்படியாகக் கரைந்து தானாகவே விழும்.
பேக்கிங் சோடா மற்றும் ஆமணக்கு எண்ணெய் - பேக்கிங் சோடா மற்றும் ஆமணக்கு எண்ணெய் கலந்து ஒரு பேஸ்ட் செய்து, அதை மருவில் தடவவும்.
இந்த கலவை தோலின் மேல் அடுக்கை அகற்றுவதன் மூலம் மருவை மெதுவாக நீக்குகிறது. இந்த பேஸ்ட்டை தினமும் இரண்டு முறை மருவில் தடவினால், சில நாட்களுக்குள் பலன்கள் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |