இந்த 3 பொருள் போடுங்க - கருப்பான உதடு ரோஜா இதழ் போல மாறும்
பெண்கள் எல்லோரும் அவர்களின் உதடு அழகாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். நமது உதடுகள் தான் நம்மை மிகவும் அழகாக எடுத்து காட்டும்.
அதனால் தான் அனைவரும் கருமையான உதட்டை விரும்புவதில்லை. உதடுகள் கருமையாக இருந்தால் அது எமது முக அழகையே பாதிக்கும்.
அந்த கருமை நிறம் சிலருக்கு பழக்கங்கள் மூலமாகவும் வரும். சிலருக்கு உணவுகள் மூலமாகவும் வரும்.
ஆனால் உதட்டின் கருமை நிறத்தை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு மாற்ற முடியும் அந்த பொருட்கள் மற்றும் அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
உதடுகள் சிவப்பாக மாற வீட்டு வைத்தியம்
எலுமிச்சை மற்றும் தேன் - இயற்கையாக நிறத்தை மாற்றும் குணம் எலுமிச்சையில் இருக்கிறது. தேன் உதட்டில் இருக்கும் ஈரப்பதத்தை தக்க வைத்திருக்கிறது.
இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யவும், சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து உதடுகளை பாதுகாக்கவும் மிகவும் உதவியாக இருக்கும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன், அரை தேக்கரண்டி தேன் கலந்து, இரவு தூங்குவதற்கு முன் உதடுகளில் தடவவும். இதை காலையில் சாதாரண நீரில் கழுவினால் போதும்.
ரோஜா இதழ் மற்றும் பால் - ரோஜா இதழ்கள் இயற்கையாகவே உதடுகளுக்கு ரோஸ் நிறத்தை அளிக்கும். பால், உதடுகளின் நிறமியை குறைத்து கருமையை போக்க உதவும்.
இதற்காக ரோஜா இதழ்களை ஒரு மணி நேரம் பாலில் ஊறவைத்து அதை பசை போல அரைத்து உதடுகளில் பூச வேண்டும்.
இதை 15 நிமிடம் கழித்து கழுவி பாருங்கள் இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்தால் கருப்பு உதடு சிவப்பாக மாறும்.
பீட்ரூட் சாறு - பீட்ரூட் ஒரு அற்புதமான இயற்கை அழகு பொருளாக விளங்குகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உதடுகளுக்கு ஊட்டமளித்து, கருமையை நீக்கி படிப்படியாக இளஞ்சிவப்பு நிறத்தை அளிக்கும்.
எனவே பிட்ரூட் சாறை எடுத்து அதை இரவில் தூங்கும் முன்னர் உதட்டில் பூசி இரவு முழுக்க வைத்து காலையில் கழுவி வர நல்ல பலன் கிடைககும்.
சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் - உதடுகளில் உள்ள டெத் செல்களை நீக்குவதன் மூலம் அதில் இருக்கும் கருமையை மறைக்க முடியும். ஆலிவ் ஆயிலில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஃபேட்டி ஆசிட்கள் உதடுகளுக்கு ஆழமான ஊட்டத்தை அளித்து வறண்டு போகாமல் பாதுகாக்கும்.
ஒரு தேக்கரண்டி சர்க்கரையுடன், அரை தேக்கரண்டி ஆலிவ் ஆயில் கலந்து, உதடுகளில் 1-2 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் உதட்டின் நிறம் மாறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |