பாத வெடிப்புக்களால் பாதம் அசிங்கமாக உள்ளதா? அப்போ இதை பண்ணுங்க
உடலின் அழகை எடுத்து காட்டக்கூடிய ஒரு பகுதிகளில் பாதமும் ஒன்று. நமது கால்களுக்கு காலணிகள் அணியும் போது பாதம் அழகாக இருந்தால் தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
இது இன்றைய சமூகத்தினருக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. உடலில் பித்தத்தின் அளவு அதிகரிப்பதால் தான் பாத வெடிப்புகள் வருகின்றன.
இது தவறான உணவுப்பழக்கவழக்கத்தினாலும் வரக்கூடும். இதனால் நடக்க மிகவும் கஷ்டமாக இருக்கம். இந்த பித்த வெடிப்பை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய சில எழிய வழிமுறைகளை பார்க்கலாம்.
பாத வெடிப்பு
இந்த பாத வெடிப்புக்கள் கிருமி தொற்றின் மூலம் வரலாம். இதற்கு தினமும் சுத்தமான தேனை பாதத்தின் வெடிப்புக்கள் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். இது தவிர ஆலிவ் எண்ணெய் தடவி வர வேண்டும்.
பின்னர் ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் அல்லது பாதம் எண்ணெய்யை சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்துகொள்ள வேண்டும். பின்னர் சூடான நீரில் பாதத்தை கழுவிய பின்னர் தயார் செய்த பேஸ்டை அதில் அப்ளை செய்ய வேண்டும்.
இதனை 10 நிமிடம் விட்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் பித்த வெடிப்பு இல்லாமல் போகும். இதை தவிர வாழைப்பழத்தை நன்கு மசித்து, பாதத்தில் தடவி சுமார் 10 நிமிடங்கள் கழித்து பின்னர் நீரினால் கழுவி வர பாத வெடிப்புகள் மறையத் தொடங்கும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணையை சமமான அளவில் எடுத்து மஞ்சளுடன் சேர்த்து பாதத்தில் கொஞ்சமாக தடவி கழுவி வந்தால் பாதம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக மாறும்.
எலுமிச்சை சாறை இளஞ்சூட்டில் கலந்து வாரத்திற்கு ஒரு முறை 10 நிமிடங்கள் கழித்த பின்னர் கழுவினால் பாதத்தில் உள்ள வெடிப்புகள் மாறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |